IPL2022: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது குஜராத் டைட்டன்ஸ்
அதிரடியாக விளையாடி குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக ஐபிஎல் 2022-ல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
முதலாவது குவாலிஃபையர் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது. இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வெற்றி பெற்ற குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில், ஜெய்ஸ்வால் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் பட்லர் நிதானமாக ஆடிக் கொண்டிருந்தார். ஓன்டவுன் வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடினார். 26 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட சாம்சன் 46 ரன்கள் விளாசி அவுட்டானார். அவருக்குப் பிறகு களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 20 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார்.
மேலும் படிக்க | IPL டிவிஸ்ட்: மழை பெய்தால் இந்த அணி இறுதிப்போட்டிக்கு போகும்
அடுத்தடுத்து வந்த வீரர்கள் சிறப்பாக யாரும் விளையாடவில்லை என்றாலும் பட்லர் இறுதிக்கட்ட ஓவர்களில் விஸ்வரூபம் எடுத்தார். 38 பந்துகளில் 39 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த அவர், அடுத்தடுத்த பந்துகளை பவுண்டரிக்கும், சிக்சருக்கும் பறக்கவிட்டு 56 பந்துகளில் 89 ரன்கள் குவித்து ரன்அவுட்டானார். இதில் 12 பவுண்டரிகளும் 2 சிக்சர்களும் அடங்கும். 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 188 ரன்கள் எடுத்தது.
189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறங்கியது. ராஜஸ்தான் அணிக்காக முதல் ஓவரை வீசிய போல்ட், குஜராத்தின் தொடக்க ஆட்டக்காரர் விருதிமான் சஹாவை ரன் எடுக்காமல் பெவிலியனுக்கு அனுப்பினார். அடுத்து வந்த மேத்யூ வேட், கில்லுடன் கூட்டணி அமைக்க இருவரும் ஜோடி சேர்ந்து அணியை மெதுவாக வலுவான நிலைக்கு எடுத்துச் சென்றனர். இருவரும் தலா 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அடுத்து வந்த பாண்டியா மற்றும் டேவிட் மில்லர் பொறுப்புடன் விளையாடினர்.
இறுதிக்கட்டத்தில் அடித்து ஆட வேண்டிய நிலை ஏற்பட்டபோது ருத்ரதாண்டவம் ஆடினார் மில்லர். கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவைப்பட்டபோது பிரசித் கிருஷ்ணா வீசிய முதல் 3 பந்துகளையும் அடுத்தடுத்து சிக்சருக்கு விளாசி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச்சென்றார். மில்லரின் அதிரடியில் குஜராத் அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 191 ரனக்ள் எடுத்து இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக முன்னேறியது. இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த மில்லர் 38 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார். இதில் 5 சிக்சர்களையும், 3 பவுண்டரிகளையும் விளாசினார். மறுமுனையில் கேப்டன் ஹர்திக் பாண்டியா 27 பந்துகளில் 40 ரன்கள் விளாசினார். தோல்வியை தழுவிய ராஜஸ்தான் அணி, வெள்ளிக்கிழமை நடைபெறும் இரண்டாவது எலிமினேட்டரில் விளையாட உள்ளது.
மேலும் படிக்க | ஐபிஎல் பிளே ஆப்பில் அதிக ரன்கள் அடித்த வீரர்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR