IPL டிவிஸ்ட்: மழை பெய்தால் இந்த அணி இறுதிப்போட்டிக்கு போகும்

ஐபிஎல் குவாலிஃபையரில் மழை பெய்தால் குஜராத் அணி இறுதிப்போட்டிக்கு சென்றுவிடும்  

Written by - S.Karthikeyan | Last Updated : May 24, 2022, 03:35 PM IST
  • கொல்கத்தாவில் முதல் குவாலிஃபையர்
  • குஜராத் அணிக்கு காத்திருக்கும் லக்
  • வருண பகவான் செய்வாரா?
IPL டிவிஸ்ட்: மழை பெய்தால் இந்த அணி இறுதிப்போட்டிக்கு போகும் title=

ஐபிஎல் தொடரின் குவாலிஃபையர் மேட்சுகள் கொல்கத்தாவில் இன்று தொடங்குகிறது. இப்போட்டியில் குஜராத் டைடன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோத இருக்கின்றன. முதல் குவாலிஃபையரில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு சென்றுவிடும். தோல்வியடையும் அணி கவலைபடத் தேவையில்லை. ஏனென்றால் அவர்களுக்கு இன்னொரு வாய்ப்பு இருக்கிறது.

மேலும் படிக்க | மீண்டும் ஐபிஎல்-க்கு திரும்பும் ஏபி டி வில்லியர்ஸ்! ஆர்சிபி அணியில் விளையாடுவாரா?

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதும் முதல் எலிமினேட்டரில் வெற்றி பெறும் அணியுடன் மோத வேண்டும். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும். இந்நிலையில், ஐபிஎல் குவாலிஃபையர் நடைபெறும் கொல்கத்தாவில் ஒரு டிவிஸ்ட் காத்திருக்கிறது. ஏனென்றால் அங்கு மழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஒருவேளை மழை வரவில்லை என்றால் போட்டி நடைபெறுவதில் சிக்கல் இருக்காது. இரு அணிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு செல்லும்.

மாறாக, மழை வந்தால் அது குஜராத் அணிக்கு மட்டுமே சாதகமாக முடியும். மழை குறுக்கிட்டு போட்டி நடைபெறாமல் போனால், ஐபிஎல் விதிப்படி குஜராத் டைட்டன்ஸ் அணி நேரடியாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு விளையாடாமலேயே சென்றுவிடலாம். ராஜஸ்தான் ராயல்ஸ் 2வது எலிமினேட்டர் மேட்சில் விளையாட வேண்டியிருக்கும். இந்தவகையில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு லக் காத்திருக்கிறது. அந்த லக் கிடைக்குமா? இல்லையா? என்பது போட்டி தொடங்கும்போது தெரியவரும்.

இன்னொரு சிக்கலும் இருக்கிறது. மழை விட்டுவிட்டு பெய்தால் டக்வொர்த் விதியை நடுவர்கள் பின்பற்றுவார்கள். இதனால், இரு அணிகளும் கவனமாக விளையாட வேண்டியிருக்கும். டக்வொர்த் விதியை பெரும்பாலும் இரண்டாம் அணிகளுக்கு சாதகமாக கூட பார்க்கலாம். ஏனென்றால், எந்த ஓவரில் எந்த ரன்ரேட்டில் இருக்க வேண்டும் என்பது அவர்களுக்கு முன்கூட்டியே தெரிந்துவிடும். அந்தவகையில் இன்றைய போட்டியின் முடிவை தீர்மானிப்பதில் டாஸூம் முக்கிய பங்கு வகிக்கும். 

மேலும் படிக்க | சிஎஸ்கேவின் தல மற்றும் சின்ன தல-யின் அபார சாதனை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News