ஐபிஎல் 2022: ஹர்ஷல் படேலை RCB ஏன் தக்கவைக்கவில்லை?
ஐபிஎல் 2022 மெகா ஏலத்திற்கு முன்னதாக ஹர்ஷல் படேலை ஆர்சிபி தக்கவைக்கவில்லை. அதற்கு பதிலாக விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல் மற்றும் முகமது சிராஜ் ஆகியோரை அணியில் தக்கவைக்க முடிவு செய்தது.
மெகா ஏலத்திற்கு முன்னதாக வீரர்களைத் தக்கவைப்பது இந்தியன் பிரீமியர் லீக் (IPL)உரிமையாளர்களுக்கு மிகவும் கடினமான பணியாக உள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி ஐபிஎல் 2022 ஏலத்திற்கு முன்னதாக விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல் மற்றும் முகமது சிராஜ் ஆகியோரை தக்கவைக்க முடிவு செய்து, ஹர்ஷல் படேல், தேவ்தத் படிக்கல் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் போன்ற முக்கிய வீரர்களை வெளியேற்றியது.
ALSO READ | பாகிஸ்தான் வீரருக்கு எம்.எஸ். தோனி அனுப்பிய பரிசு!
அணி நிர்வாகம் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது என்பதை மறுப்பதற்கில்லை என்றாலும், ஹர்ஷல் படேல் தான் ஏன் ஆசிஃபி அணியால் விடுவிக்கப்பட்டேன் என்பதை வெளிப்படுத்தியுள்ளார். ஐபிஎல்-ல் கலக்கி சமீபத்தில் சர்வதேச அரங்கில் அறிமுகமான ஹர்ஷல், ஏலத்திற்குச் சென்று என்னுடைய மதிப்பை ஏற்றுவதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் தெரிவித்தார். "நான் அணியில் தக்கவைக்கப்படாதபோது, மைக் ஹெசன் (RCBன் இயக்குனர்) என்னை அழைத்து, இது உங்களின் ஏல மதிப்புபை உயர்த்தும் என்றும் மனம் தளரவேண்டாம் என்று எண்னிடம் கூறினார். மற்ற அணியில் இருந்து இதுவரை என்னை யாரும் அணுகவில்லை. நான் தொடர்ந்து RCB-ல் விளையாட விரும்புகிறேன்.
RCB என்னை மீண்டும் அணியில் சேர்க்க விரும்புவார்கள், நானும் திரும்பிச் சென்று அணிக்காக விளையாட விரும்புகிறேன், ஏனெனில் RCB அணி எனது முழு வாழ்க்கையையும் மாற்றியது. விராட் கோலி மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் போன்ற ஜாம்பவான்களுடன் ஆர்சிபி டிரஸ்ஸிங் ரூமை பகிர்ந்து கொண்டது எனக்கு மிகவும் உதவியது. இதுபோன்ற வீரர்களின் அனுபவம் எனக்கு பெரிதும் பயன்தரும்" என்று என ஹர்ஷல் தெரிவித்தார். வரவிருக்கும் மெகா ஏலத்தில் ஹர்ஷல் படேலை பல அணி உரிமையாளர் தங்கள் அணியில் வாங்க முயற்சிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2021 சீசனில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் ஹர்ஷல் படேல் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | ஐபிஎல் 2022: அனைத்து போட்டிகளையும் மும்பையில் மட்டும் நடத்த திட்டம்?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR