ஐபிஎல் 2025 மெகா ஏலம் தொடங்கும் முன்பு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. அதில் முதல் விஷயமாக அணியின் கேப்டன் கேஎல் ராகுலை தக்க வைக்கவில்லை. அவருக்கு பதில் நிக்கோலஸ் பூரன், மயங்க் யாதவ், ரவி பிஷ்னோய், ஆயுஷ் படோனி மற்றும் மொஹ்சின் கான் ஆகியோரைத் தக்க வைத்துள்ளனர். 2022ம் ஆண்டு ஏலத்தில் ராகுலை அணியில் எடுத்தது லக்னோ அணி. அதனை தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக லக்னோ அணிக்காக ராகுல் விளையாடி வந்தார். இந்நிலையில் தற்போது அது முடிவுக்கு வந்துள்ளது. லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவிற்கும், ராகுலுக்கும் இடையே ஏற்பட்ட தனிப்பட்ட மோதலால் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகிறது. எல்எஸ்ஜி அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, தனிப்பட்ட ரெக்கார்டுகளை விட அணியின் வெற்றிக்கு முன்னுரிமை அளிக்கும் வீரர்களின் எங்களுக்கு தேவை என்று தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | IPL 2025: 10 அணிகள் தக்கவைத்த வீரர்கள்... கையில் இருக்கும் RTM, ஏலத்தொகை - அனைத்தும் இதோ!


எல்எஸ்ஜி அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா அளித்துள்ள சமீபத்திய பேட்டியில், "அணி வெற்றி பெறுவதற்கான மனநிலை வேண்டும். தனிப்பட்ட சாதனைகளை தவிர்த்துவிட்டு அணிக்காக விளையாடும் வீரர்கள் தேவை. தங்களது தனிப்பட்ட இலக்குகள் மற்றும் தனிப்பட்ட சாதனைகளுக்கு முன்பு, அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற மனப்பான்மை கொண்ட வீரர்கள் தான் எங்களுக்கு தேவை" என்று கோயங்கா தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் போது, எல்எஸ்ஜி அணி மோசமான தோல்வியை சந்தித்தது. இதனை தொடர்ந்து, கோயங்காவிற்கும் ராகுலுக்கும் இடையே மைதானத்திலேயே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. போட்டி முடிந்த சில நிமிடங்களிலேயே இந்த விஷயம் தீயாய் பரவியது. அப்போதே ராகுல் எல்எஸ்ஜி அணியை விட்டு விலகுவார் என்று கூறப்பட்டது.


தக்க வைக்கப்பட்ட வீரர்கள்


எல்எஸ்ஜி அணியின் தக்க வைக்கப்பட்ட வீரர்கள் குறித்து பேசிய கோயங்கா, "ஜாகீர் கான், ஜஸ்டின் லாங்கர் மற்றும் அணியின் உதவியாளர்கள் வீரர்களைத் தேர்ந்தெடுப்பதில் முக்கிய பங்கு வகித்தனர். நிக்கோலஸ் பூரனின் சீரான பேட்டிங் திறமையால் அவர் முதல் வீரராக தக்க வைக்கப்பட்டுள்ளார். ஆயுஷ் படோனி மற்றும் மொஹ்சின் கான் ஆகியோரும் எங்களுக்கு முக்கியமானவர்களாக இருந்தனர்" என்று கோயங்கா கூறினார்.


கேஎல் ராகுலின் செயல்திறன்


கேஎல் ராகுல் ஐபிஎல் 2024ல் ஓப்பனிங் வீரராக களமிறங்கி 14 போட்டிகளில் 37.14 சராசரியில் 520 ரன்கள் எடுத்தார். ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது அதிக ரன்கள் அடித்து இருந்தாலும், அவரது ஸ்டிரைக் ரேட் 136.13 குறைந்த அளவில் இருந்தது. இது அனைவரது மத்தியிலும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. எல்எஸ்ஜி அணியில் விளையாடிய 3 ஆண்டுகளில் ராகுல் 38 போட்டிகளில் விளையாடி 1200 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். இருப்பினும் அவரது ஸ்ட்ரைக் ரேட் பல கேள்விகளை எழுப்பி வருகிறது. தற்போது ராகுல் எல்எஸ்ஜி அணியில் இருந்து விடுவிக்கப்பட்டதன் மூலம், ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் இடம் பெற உள்ளார். தொடக்க ஆட்டக்காரரையும், விக்கெட் கீப்பராகவும் ராகுல் உள்ளதால் அவருக்கு அதிக டிமாண்ட் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க |  IPL 2025: 10 அணிகள் தக்கவைத்த வீரர்கள்... கையில் இருக்கும் RTM, ஏலத்தொகை - அனைத்தும் இதோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ