ஐபிஎல் ஏலம் 2023 தேதி மற்றும் நேரம் விவரம்: இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 ஏலம் தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்கத் தயாராக உள்ளது. ஏனெனில் அணியின் உரிமையாளர்கள் தங்கள் அணிக்கான வீரர்களை ஏலம் எடுக்க தயாராக உள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாளை நடைபெற உள்ள ஐபிஎல் மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings (CSK), டெல்லி கேபிடல்ஸ் (Delhi Capitals (DC), குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans (GT), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders (KKR), லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (Lucknow Super Giants (LSG), மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians (MI), பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings (PBKS), ராஜஸ்தான் ராயல்ஸ் Rajasthan Royals (RR), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (Royal Challengers Bangalore (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Sunrisers Hyderabad (SRH) ஆகிய 10 அணிகளின் தலைவர்களும் தங்களுக்கு தேவையான வீரர்களை அணியில் எடுக்க தயாராகி வருகின்றனர். 2023 ஆம் ஆண்டு நடக்கும் ஐபில்எல் போட்டியில் இந்த வீரர்கள் விளையாடுவார்கள். ஐபிஎல் 2023 ஏலத்தின் அனைத்து விவரங்களும் தெரிந்துக்கொள்ளுவோம்.


ஐபிஎல் ஏலம் 2023 இடம், ஹோட்டல்
ஐபிஎல் ஏலம் 2023 கேரளாவின் கொச்சி நகரில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சி கிராண்ட் ஹயாத் ஹோட்டலில் நடைபெறும். ஐபிஎல் ஏலம் கொச்சியில் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.


2023 ஐபிஎல் ஏலத்தை எந்த டிவி சேனல் ஒளிபரப்பும்?
ஐபிஎல் 2023 ஏலம் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.


மேலும் படிக்க: ஐபிஎல் 2023 ஏலத்தில் இவ்வளவு நிபந்தனைகளா? சுவாரஸ்ய தகவல்கள்


ஐபிஎல் 2023 ஏலத்தில் பங்கேற்கும் வீரர்கள் விவரம்
கொச்சியில் நடைபெறும் ஐபிஎல் ஏலத்தில் மொத்தம் பங்கேற்கும் 405 வீரர்களில் 273 பேர் இந்தியர்கள். மீதமுள்ள 132 வீரர்கள் வெளிநாட்டவர்கள்.ஐபிஎல் 2023 தொடரில் பங்கேற்கும் 10 அணிகளில் மொத்தம் 87 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதில் 30 பேர் வெளிநாட்டு வீரர்களால் நிரப்பப்படுவார்கள்.


மேலும் படிக்க: மினி ஏலம்: தமிழக வீரர்களுக்கு முன்னுரிமை! சிஎஸ்கே லிஸ்ட்டில் 5 தமிழர்கள்!


மேலும் படிக்க: யாரும் வேண்டாம்! இவர் மட்டும் போதும்! சிஎஸ்கே குறிவைக்கும் முக்கிய வீரர்!


ஐபிஎல் ஏலம் 2023: ஒவ்வொரு அணியும் காலியாக உள்ள இடங்கள் விவரம்:


அணி தக்க வைக்கப்பட்ட வீரர்கள்  ஏலத்தில் எடுக்கப்படும் வீரர்கள் அயல்நாட்டு வீரர்கள்
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK)  18 7 2
டெல்லி கேபிடல்ஸ் (DC) 20 5 2
குஜராத் டைட்டன்ஸ் (GT) 18 7 3
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) 14 11

3

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) 15 10 4
மும்பை இந்தியன்ஸ் (MI) 16 9 3
பஞ்சாப் கிங்ஸ் (PBKS) 16 9 3
ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) 16 9 4
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) 18 7 2
சன்ரைசர்ஸ் ஐதராபாத் (SRH) 12 12 4

ஐபிஎல் ஏலம் 2023: ஒவ்வொரு அணியும் உள்ள இருப்பு மற்றும் செலவு விவரம்


அணி செலவழித்த பணம் (கோடியில்) மீதமுள்ள பணம் (கோடியில்)
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) ரூ. 52.75 கோடி ரூ. 42.25 கோடி
பஞ்சாப் கிங்ஸ் (PBKS) ரூ. 62.80 கோடி ரூ. 32.20 கோடி
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) ரூ. 71.65 கோடி ரூ. 23.35 கோடி
மும்பை இந்தியன்ஸ் (MI) ரூ. 74.45 கோடி ரூ. 20.55 கோடி
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK)  ரூ. 74.55 கோடி ரூ. 20.45 கோடி
டெல்லி கேபிடல்ஸ் (DC) ரூ. 75.55 கோடி ரூ. 19.45 கோடி
குஜராத் டைட்டன்ஸ் (GT) ரூ. 75.75 கோடி ரூ. 19.25 கோடி
ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) ரூ. 81.80 கோடி ரூ. 13.20 கோடி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) ரூ. 86.25 கோடி ரூ. 8.75 கோடி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) ரூ. 87.95 கோடி ரூ. 7.05 கோடி

 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ