ஐபிஎல் 2023 ஏலத்தில் இவ்வளவு நிபந்தனைகளா? சுவாரஸ்ய தகவல்கள்!

ஐபிஎல் 2023 மினி ஏலம்: ஐபிஎல் 2023 ஏலம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரஸ்ய தகவல்கள்( நேரம், இடம், வீரர்கள், மீதமுள்ள பணம் ).  

Written by - RK Spark | Last Updated : Dec 20, 2022, 01:12 PM IST
  • ஐபிஎல் ஏலம் இந்த வாரம் நடைபெறுகிறது.
  • பல வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
  • சிஎஸ்கே சாம் கரணை எடுக்க தயாராக உள்ளது.
ஐபிஎல் 2023 ஏலத்தில் இவ்வளவு நிபந்தனைகளா? சுவாரஸ்ய தகவல்கள்! title=

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 மினி ஏலம் 2023 ஆம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கு முன் அதன் தாக்கத்தை அதிகரிக்க செய்ய உள்ளது. முக்கியமான அணிகள் தங்களுக்கான வீரர்களை அணியில் எடுக்க தயாராகி வருகின்றனர்.  மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற அணிகளின் பட்டியலில் சாம் கர்ரன், பென் ஸ்டோக்ஸ் போன்றவர்கள் இடம் பெறுவார்கள். ஐபிஎல் ஏலம் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஐபிஎல் 2023 சிறு ஏலத்தின் அனைத்து விவரங்களை பற்றி பாப்போம்.

ஐபிஎல் 2023 ஏல தேதி, நேரம், இடம்

ஐபிஎல் 2023 ஏலம் டிசம்பர் 23, வெள்ளிக்கிழமை கொச்சியில் நடைபெறுகிறது. ஏலம் இந்திய நேரப்படி மதியம் 12:30 மணிக்கு தொடங்கி மாலை வரை நடைபெற உள்ளது.

ஐபிஎல் 2023 ஏல விதிகள்

ஒவ்வொரு உரிமையாளரும் முழு தொகையில் 75% செலவழிக்க அனுமதிக்கப்படும், அதற்கு மேல் செலவழிக்க முடியாது. முந்தைய ஆண்டுகளைப் போலன்றி, ஐபிஎல் 2023 ஏலத்தில் ரைட் டு மேட்ச் (ஆர்டிஎம்) கார்டு விருப்பம் இருக்காது. ஒவ்வொரு உரிமையாளரின் அணியிலும் குறைந்தது 18 வீரர்கள் மற்றும் அதிகபட்சம் 25 வீரர்கள் இருப்பார்கள்.

மேலும் படிக்க | ஐபிஎல் அவருக்கு சரிப்பட்டு வராது - சொல்வது தினேஷ் கார்த்திக்!

ஐபிஎல் 2023 ஏலத்தில் ஒவ்வொரு அணிக்கும் மீதமுள்ள பர்ஸ் மதிப்பு

மும்பை இந்தியன்ஸ் - ரூ 20.05 கோடி (12 இடங்கள்)

சென்னை சூப்பர் கிங்ஸ் - ரூ 20.45 கோடி (9 இடங்கள்)

டெல்லி கேபிடல்ஸ் - ரூ 19.45 கோடி (7 இடங்கள்)

குஜராத் டைட்டன்ஸ் - ரூ 19.25 கோடி (10 இடங்கள்)

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரூ 7.05 கோடி (14 இடங்கள்)

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ரூ 23.35 கோடி (14 இடங்கள்)

பஞ்சாப் கிங்ஸ் - ரூ 32.2 கோடி (12 இடங்கள்)

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ரூ 8.75 கோடி (9 இடங்கள்)

ராஜஸ்தான் ராயல்ஸ் - ரூ 13.2 கோடி (13 இடங்கள்)

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ரூ 42.25 கோடி (17 இடங்கள்)

அடிப்படை விலையுடன் IPL 2023 ஏல வீரர்கள் பட்டியல்

2 கோடி அடிப்படை விலை: டாம் பான்டன், சாம் கர்ரன், கிறிஸ் ஜோர்டான், டைமல் மில்ஸ், ஜேமி ஓவர்டன், கிரேக் ஓவர்டன், அடில் ரஷித், பில் சால்ட், பென் ஸ்டோக்ஸ், கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், கிறிஸ் லின், கேன் வில்லியம்சன், ஆடம் மில்னே, ஜிம்மி நீஷம், ரிலீ ரோசோவ், ரஸ்ஸி வான் டெர் டுசென், ஜேசன் ஹோல்டர், நிக்கோலஸ் பூரன்

1.5 கோடி அடிப்படை விலை: சீன் அபோட், ரிலே மெரிடித், ஜே ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா, ஷகிப் அல் ஹசன், ஹாரி புரூக், வில் ஜாக்ஸ், டேவிட் மாலன், ஜேசன் ராய், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், நாதன் கூல்டர்-நைல்

1 கோடி அடிப்படை விலை: மயங்க் அகர்வால், மனிஷ் பாண்டே, முகமது நபி, முஜீப் உர் ரஹ்மான், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், ஆண்ட்ரூ டை, ஜோ ரூட், லூக் வூட், மைக்கேல் பிரேஸ்வெல், கைல் ஜேமிசன், மேட் ஹென்றி, டாம் லாதம், டேரில் மிட்செல், ஹென்ரிச் கிஸ்லாஸ், ஹென்ரிச் கிஸ்லாஸ் , குசல் பெரேரா, ரோஸ்டன் சேஸ், ரகீம் கார்ன்வால், ஷாய் ஹோப், டேவிட் வைஸ்

IPL 2023 மினி ஏலத்தை எங்கே பார்க்கலாம்?

ஐபிஎல் 2023 மினி ஏலங்களை ஸ்டார்ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் டிவியில் பார்க்கலாம், ஜியோ சினிமா ஆப்பில் ஆன்லைனில் ஸ்ட்ரீம் செய்யப்படும்.

மேலும் படிக்க | யாரும் வேண்டாம்! இவர் மட்டும் போதும்! சிஎஸ்கே குறிவைக்கும் முக்கிய வீரர்!

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News