ஐபிஎல் சுவாரஸ்யங்கள்: 4வது இடத்தில் இருக்கும் அணி கோப்பை வென்றது இல்லையா?
IPL 2022 Highlights இன்று எலிமினேட்டர் போட்டியில் லக்னோ மற்றும் ஆர்சிபி அணிகள் விளையாடுகின்றன. இந்த போட்டியில் தோல்வி பெரும் அணிகள் இந்த வருட ஐபிஎல் போட்டியில் இருந்து வெளியேறும்.
ஐபிஎல் பைனல் போட்டி மே 29ம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது. குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் குவாலிபயர் போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்று பைனல் போட்டிக்கு நுழைந்துள்ளது. பரபரப்பான இந்த போட்டியில் இரண்டாவதாக பேட்டிங் செய்த குஜராத் அணியின் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடினர். ஹர்திக் பாண்டியா மற்றும் மில்லரின் அதிரடியில் 19.3 ஓவரில் குஜராத் வெற்றி பெற்றது.
மேலும் படிக்க | ஐபிஎல் பிளே ஆப்பில் அதிக ரன்கள் அடித்த வீரர்!
இன்று நடைபெற உள்ள எலிமினேட்டர் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் விளையாடுகின்றன. ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி அணியை மும்பை அணி வீழ்த்தியதால் 4வது அணியாக ஆர்சிபி பிளே ஆப் சுற்றுக்கு நுழைந்தது. இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் 4வது அணியாக பிளே ஆப்பிற்கு வரும் அணிகள் கோப்பையை இதுவரை வென்றது இல்லை என்று தகவல் பரவியது. பாப் டு பிளேசிஸ் தலைமையில் ஆர்சிபி தனது முதல் ஐபிஎல் பட்டத்தை இந்த முறை வெல்லும் என்று ரசிகர்கள் ஆர்வமாக இருந்த நிலையில் இவ்வாறு தவறான தகவல் பரவியது.
2009ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெக்கான் சார்சர்ஸ் அணி 4வது அணியாக பிளே ஆப்பில் நுழைந்து ஆர்சிபி அணியை வீழ்த்தி கோப்பையை வென்றுள்ளது. இதனால் ஆர்சிபி ரசிகர்கள் சற்று பெருமூச்சு விட்டுள்ளனர். இந்த வரும் ஆர்சிபி அணி மற்ற ஆண்டுகள் இல்லாத வகையில் சிறப்பாக ஆடி வருகிறது. இடைப்பட்ட போட்டிகளில் சிறிது சரிவை பெற்று இருந்தாலும், தற்போது பலம் வாய்ந்த அணியாகவே உள்ளது. எலிமினேட்டர், குவாலிபயர் 2 மற்றும் பைனல் போட்டிகளை வென்று கோப்பையை வெல்ல தயாராகி வருகிறது.
மேலும் படிக்க | மீண்டும் ஐபிஎல்-க்கு திரும்பும் ஏபி டி வில்லியர்ஸ்! ஆர்சிபி அணியில் விளையாடுவாரா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR