குஜராத் லயன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த போட்டியில் பீல்டிங் செய்து கொண்டிருந்த குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா மின்னல் வேகத்தில் பந்தை வீசி சஞ்சு சாம்சனை ரன்அவுட்டாக்கினார். ஹர்திக் துரோ வீசியதில் ஸ்டம்ப் உடைந்தது. இப்போது இந்த LED ஸ்டம்புகளின் விலை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இந்த ஸ்டம்புகளின் விலையானது, இந்திய அணி ஒருநாள் போட்டிக் கட்டணத்துக்கு சமமாம்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

LED ஸ்டம்புகளின் விலை எவ்வளவு?


ஒரு செட் எல்இடி டெக்னாலஜி  ஸ்டம்புகளின் விலை சுமார் 35 முதல் 40 லட்சம் ரூபாய். ஹைடெக் தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்படும் இந்த ஸ்டம்புகள் உடைந்தால் போட்டி அமைப்பாளர்கள் அதிகபட்சம் 40 லட்சம் ரூபாயை இழக்க நேரிடும். குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஹர்திக் வீசிய துரோ மூலம் ஐபிஎல் அமைப்புக்கு 40 லட்சம் செலவு ஏற்பட்டுள்ளது. '



மேலும் படிக்க | மும்பை இந்தியன்ஸ் பற்றி சச்சின் தெண்டுல்கர் மகள் கூறியது இதுதான்


இந்திய அணியின் கட்டணம்


ஒரு செட் எல்இடி ஸ்டம்புகளின் விலை ஒரு போட்டிக் கட்டணத்திற்கு சமம் என ஏற்கனவே கூறியிருந்தோம். அதாவது இந்திய  அணி ஒரு ஒரு நாள் போட்டி விளையாடினால் 60 லட்சம் ரூபாயும், 20 ஓவர் போட்டியில் பங்கேற்று விளையாடினால் 33 லட்சம் ரூபாயும் போட்டிக் கட்டணமாக பெறுகிறது. இந்தக் கட்டணங்களுக்கு இணையாக கிரிக்கெட்டில் பயன்படுத்தப்படும் எல்இடி ஸ்டம்புகளின் விலை இருக்கிறது. 



எல்இடி ஸ்டம்புகள் ஏன்? 


LED ஸ்டம்புகள் நடுவருக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். ஹைடெக் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் இந்த ஸ்டம்புகளில் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும். பந்து ஸ்டம்புகளை தாக்கும் வினாடியில் சிவப்பு நிறத்தில் பெய்ல்ஸில் கலர் ஒளிக்கும். இதுதான் எல்இடி ஸ்டம்புகளின் ஸ்பெஷல். 


மேலும் படிக்க | சச்சின் தெண்டுல்கரின் வருங்கால மருமகன் இவரா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR