சச்சின் தெண்டுல்கரின் வருங்கால மருமகன் இவரா?

சச்சின் தெண்டுல்கரின் வருங்கால மருமகன் குஜராத் அணியில் விளையாடும் சுப்மான் கில் என சமூகவலைதளங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. 

 

சச்சின் தெண்டுல்கரின் மகள் சாரா தெண்டுல்கருடன் குஜராத் அணியில் விளையாடும் சுப்மான் கில் டேட்டிங் செய்வதாக கூறப்படுகிறது. 

 

1 /5

அவர்கள் இருவரும் அண்மையில் கோவாவில் இருப்பதுபோல் இருவேறு புகைப்படங்களை பகிர்ந்ததனர். இருவரும் பகிர்ந்த புகைப்படம் ஒரே இடமாக இருந்ததால், கில்லும் சாரா டெண்டுல்கரும் கோவா சென்றுள்ளனர் என நெட்டிசன்கள் அடித்துவிட்டனர். 

2 /5

மேலும், காரில் இருப்பதுபோல் சாரா தெண்டுல்கர் பகிர்ந்த புகைப்படத்தில் இருந்த கார் சுப்மான் கில்லின் கார் என்றும் நெட்டிசன்கள் கூறினர். 

3 /5

இந்த செய்தி தீயாக சமூகவலைதளங்களில் பரவியபோதும், சாரா தெண்டுல்கர் மற்றும் சுப்மான் கில் இது குறித்து எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை.  இனஸ்டாகிராமில் ஒருவருக்கொருவர் கில்லும், சாராவும் பின் தொடர்ந்து வருகின்றனர். 

4 /5

தற்போது சாரா தெண்டுல்கர் மாடலிங்கில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். பாலிவுட் மாடல் மற்றும் நடிகர்கள் பனிதா சந்து மற்றும் தானியா ஷ்ராஃப் ஆகியோருடன் டிவி விளம்பரத்தில் நடித்தார்.

5 /5

சாராவுக்கு இன்ஸ்டாகிராமில் 2 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர். அவர் ஒவ்வொரு முறையும் சமூக ஊடக தளத்தில் ஒரு படம் அல்லது வீடியோவை பதிவிடும்போது வைரலாகிவிடுகிறது.