கூகுள், அமேசான், ஏர்டெல்... ஐபிஎல் உரிமையை கைப்பற்றப்போவது யார்?
ஐபிஎல் ஒளிபரப்பு உரிமைக்கான ஏலம் ஆன்லைனில் ஜூன் 12 அன்று நடைபெற உள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக்கிற்கான (ஐபிஎல்) மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஊடக உரிமை ஏலத்தில் ஆறு ஏலதாரர்கள் முன்னிலையில் உள்ளனர். 2023 - 2027 வரை அடுத்த ஐந்தாண்டுகளுக்கான ஊடக உரிமைகளுக்கான ஏலம் ஜூன் 12 அன்று நடைபெற உள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) டிஸ்னிஸ்டார், சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா, Zee என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் மற்றும் Viacom18 ஆகியவை ஏலத்தில் பங்கேற்க உள்ளது. உலகின் பிற பகுதிகளுக்கான ஏலத்தில் டைம்ஸ் இன்டர்நெட், FunAsia விண்ணப்பித்து உள்ளது.
மேலும் படிக்க | தோல்விக்கு காரணம் என்ன?... பண்ட் விளக்கம்
டெக் ஜாம்பவான்களான Amazon மற்றும் Alphabet (Google) டெண்டர் ஆவணத்தை எடுத்த போதிலும், கடைசி நேரத்தில் ஏலத்தில் இருந்து விலகினர். இந்தியா டிவி (பேக்கேஜ் ஏ), இந்தியா டிஜிட்டல் (பேக்கேஜ் பி) மற்றும் பிரத்தியேகமற்ற இந்தியா டிஜிட்டல் (பேக்கேஜ் சி) ஆகியவற்றிற்கு நான்கு ஏலதாரர்கள் மட்டுமே இருந்ததாக பிசிசிஐ உறுதிப்படுத்தி இருந்தது. அதே நேரத்தில் டைம்ஸ் இன்டர்நெட் மற்றும் ஃபன்ஏசியா இந்தியா தவிர மற்ற நாடுகளுக்கு ஏலம் எடுக்க முயன்றது. அமேசான் மற்றும் கூகிள் கடைசி நேரத்தில் பங்கேற்காதது சற்று ஆச்சரியமாக உள்ளது என்று பலர் கூறி வருகின்றனர்.
நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கும் சந்தைப்படுத்தல் நிபுணர் ஒருவர் கூறுகையில், பேக்கேஜ் பற்றிய சரியான தகவல்கள் முறையாக சொல்லப்படாததால் சில நிறுவனங்கள் ஏலத்தில் இருந்து விலகி உள்ளதாக கூறியுள்ளது. சில மூத்த பிசிசிஐ நிர்வாகிகள் பிரத்தியேகமற்ற பேக்கேஜில் அதிக ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. 74 போட்டிகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 410 போட்டிகள் நடைபெற வாய்ப்புள்ளதாக ஏலதாரர்களுக்கு பிசிசிஐ தெரிவித்துள்ளது. பிசிசிஐ ரூ. 36,000 கோடியை இந்த வருமானமாக பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை டிஸ்னிஸ்டாரிடம் ரூ. 16,347.5 கோடி பெற்றது.
மேலும் படிக்க | ஐபிஎல் போட்டிகளை அதிகரிக்க பிசிசிஐ முடிவு! புதிய விதிகள் அமல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR