ஐபிஎல் 15-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான், குஜராத், கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்துள்ளது. மும்பையும், சிஎஸ்கேவும் இன்னும் வெற்றிக் கணக்கை தொடங்கவில்லை. இந்நிலையில் சிஎஸ்கே அணி முதல் 2 போட்டிகளில் பனி மூட்டத்தின் காரணமாக விக்கெட் எடுப்பதில் சிக்கல் இருந்ததாகக் கூறிய நிலையில், ஐபிஎல் நிர்வாகம் அதற்கு பதிலடி தரும் வகையில் சம்பவம் செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | ஐபிஎல் இறுதிப்போட்டி எங்கு நடைபெற உள்ளது தெரியுமா? வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!


ஐபிஎல் லீக் முதல் போட்டியில், கொல்கத்தாவுடன் மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை சந்தித்தது. மும்பையில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. சென்னை அணியின் பலமான டூபிளசிஸ் இந்த முறை பெங்களூரு அணியில் உள்ளார். முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 131 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியில் இரண்டு ஆண்டுகள் கழித்து 50 ரன்கள் எடுத்தார் தோனி. 


அடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் முடிவில் மும்பை மைதானத்தில் இரண்டாவதாக பந்துவீசும் போது பனி மூட்டம் காரணமாக விக்கெட் எடுப்பதில் சிரமம் இருப்பதாக சிஎஸ்கே தரப்பில் சொல்லப்பட்டது. இதனையடுத்து லக்னோ அணியுடனான இரண்டாவது ஆட்டத்திலும் இதே நிலை தான் நேர்ந்தது. சிஎஸ்கே இரண்டாவது போட்டியிலும் தோல்வியை சந்தித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தது. இதற்கும் பனி மூட்டம் தான் காரணம் என சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபம் பிளமிங் கூறியிருந்தார். 



மேலும் படிக்க | RCB vs Virat Kohli: ரொனால்டோவின் மூளையை ஸ்கேன் செய்ய ஆசைப்படும் விராட் கோலி


இதனையடுத்து நிலைமையை சுதாகரித்துக் கொண்ட ஐபிஎல் நிர்வாகம், சென்னை அணி விளையாடிய 3-வது போட்டியில் புதிய டெக்னிக்கை கையாண்டது. சென்னை - பஞ்சாப் இடையேயான போட்டி நடைபெற்ற ப்ராபோர்ன் மைதானத்தில் பனியை கட்டுப்படுத்த ரசாயனத்தை மையானத்தை சுற்றி தெளித்தது. இதன்காரணமாக பனி மூட்டம் சற்று குறைவாகவே இருந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் ரன்கள் வாரி வழங்கினர். 180 ரன்களை அடித்தது பஞ்சாப். 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சிஎஸ்கே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து படுதோல்வி அடைந்தது. 


ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே முதல் மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்தது இதுவே முதல்முறை. இந்த போட்டியின் தோல்விக்கு இனியும் பனி மீது பழி போட முடியாது  அதற்கு பதில் அணிக்கு வலு சேர்க்கும் வேலையை பாருங்கள் என சொல்லாமல் சொல்லிவிட்டது ஐபிஎல் நிர்வாகம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR