IPL 2021 Match 51: ராஜஸ்தான் ராயல்ஸை வென்ற மும்பை இண்டியன்ஸ்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை மண்ணைக் கவ்வ வைத்த மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட்டர்கள்
ஐபில் போட்டித்தொடரின் 51வது போட்டியில் மும்பை அணி 8.2 ஓவர்களிலேயே ராஜஸ்தான் அணி நிர்ணயித்த இலக்கை சுலபமாக அடைந்து வெற்றியை பதிவு செய்தது. 90 ரன்கள் என்ற இலக்கை 8 விக்கெட் வித்தியாசத்தில் அடைந்தது மும்பை அணி
முன்னதாக முதலில் ம்ட்டை வீச களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 90 ரன்கள் மட்டுமே எடுத்தது. கூல்டர் நைல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ராஜஸ்தான் அணியின் விக்கெட்டுகள் மளமளவென்று சரிந்ததால் ஆர்.ஆர் அணி 90 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. மும்பை அணியின் பந்துவீச்சாளர்கள் தங்கள் அணிக்கு பிரகாசமான தொடக்கத்தை அளித்தனர்.
அடுத்து களம் இறங்கிய மும்பை இண்டியன்ஸின் தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடியாக ஆடி அணியின் மகத்தான வெற்றிக்கு அஸ்திவாரம் இட்டார்கள். 13 பந்துகளில் 22 ரன்களை அடித்த ரோஹித் ஷர்மாவை, சேத்தன் சகாரியா அவுட்டாக்கினார்.
இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் அருமையாய் ஆடினார்கள்., 25 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 50 ரன்கள் எடுத்த கிஷன் அணியின் துரித வெற்றியை உறுதி செய்தார். 11.4 ஓவர்கள் மீதமிருக்கும் நிலையில் 8 விக்கெட் வெற்றியை மும்பை இண்டியஸ் அணி பெற கிஷன் முக்கிய காரணம் என்றே சொல்லலாம்.
இந்த வெற்றியின் மூலம், புள்ளிகள் பட்டியில் கொல்கத்தா அணியின் இடத்தைப் பிடித்தது. ஆனால் குறைந்த நிகர ரன்-ரேட் என்பது அவர்களுக்கு பின்னடைவாக இருக்கிறது.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 14வது சீசனில் பிளேஆஃபிற்கு 4வது அணியாக தகுதி பெறும் வாய்ப்புக்காக இரு அணிகளும் மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது, ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
மறுபுறம், ராஜஸ்தான், பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டியில் நுழைய ஏதேனும் அதிசயம் நடைபெறவேண்டும். கூல்டர் நைல் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Also Read | மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - பிளேஆப் கனவு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR