RR vs MI: மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - பிளேஆப் கனவு யாருக்கு கைகூடும்?

RR vs MI Dream 11: ராஜஸ்தான் ராயல்ஸ் 6 வது இடத்திலும், மும்பை இந்தியன்ஸ் 7 வது இடத்திலும் உள்ளது. இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானது.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 5, 2021, 07:11 PM IST
  • இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானது.
  • இரு அணிகளும் 10-10 புள்ளிகளைப் பெற்றுள்ளன.
  • ராஜஸ்தான் ராயல்ஸ் 6 வது இடத்திலும்..
  • மும்பை இந்தியன்ஸ் 7 வது இடத்திலும்..
RR vs MI: மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - பிளேஆப் கனவு யாருக்கு கைகூடும்? title=

ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங்:
டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பீல்டிங்கை தேர்வு செய்தது. இன்னும் சற்று நேரத்தில் ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்யவுள்ளது.

 


RR vs MI Dream 11: ஐபிஎல் 2021 (Indian Premier League) இன்றைய 51வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் நேருக்கு நேர் மோதுகின்றன. இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானது. ஏனென்றால், இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி பிளேஆப் சுற்றுக்கு செல்லும் தகுதியை தக்கவைத்துக்கொள்ளும்.

கடைசி போட்டியில் வெற்றி பெற்று ராஜஸ்தான் அணியில் இன்று எந்த மாற்றமும் இருக்காது எனத் தெரிகிறது. நன்றாக பேட்டிங் செய்து கொண்டிருந்த மஹிபால் லோமரர் அணிக்கு திரும்பி வரக்கூடலாம். ஒருவேளை அவர் அணியில் இடம்பெற்றால் யாருடைய இடத்தில் களம் இறக்கப்படுவார் என்று பார்க்க வேண்டும்.

மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரை, டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் நாதன் கூல்டர்-நைல் மற்றும் ஜெயந்த் யாதவ் ஆகியோர் நன்றாக விளையாடினர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், அனைத்து வீரர்களும் நல்ல உடற்தகுதியுடன் இருந்தால், நடப்பு சாம்பியன்கள் மும்பை அணியில் எந்த மாற்றமும் இல்லாமல் களம் இறங்கலாம்.

ALSO READ | ஐ.பி.எல் 2021 புள்ளிகள் அட்டவணை: ஆரஞ்சு மற்றும் ஊதா நிற தொப்பி யார் கையில்?

இரு அணிகளிலும் இந்த 11 பேர் விளையாட வாய்ப்புள்ளது:
மும்பை இந்தியன்ஸ்: குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், சவுரப் திவாரி, கீரன் பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியா, நாதன் கூல்டர்-நைல், ஜெயந்த் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட்.

ராஜஸ்தான் ராயல்ஸ்: எவின் லூயிஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்/விக்கெட் கேப்பார்), சிவம் துபே, க்ளென் பிலிப்ஸ், டேவிட் மில்லர், ராகுல் தேவாடியா, ஆகாஷ் சிங்/ஸ்ரேயாஸ் கோபால்/மஹிபால் லோமோர், சேத்தன் சகரியா, மயங்க் மார்கண்டே, முஸ்தாபிஜூர் ரஹ்மான்.

எம்ஐ 7 வது மற்றும் ராஜஸ்தான் 6 வது இடத்தில் உள்ளது:
இந்த ஆண்டு புள்ளிகள் அட்டவணையைக் குறித்து பார்த்தால், இதுவரை இரு அணிகளும் 12 போட்டிகளில் பங்கேற்றுள்ளன. அதில் இரு அணிகளும் தலா 5-5 போட்டிகளில் வென்றுள்ளன. மேலும் இரு அணிகளும் 10-10 புள்ளிகளைப் பெற்றுள்ளன. ஆனால் நல்ல நெட் ரன் ரேட் காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் 6 வது இடத்திலும், மும்பை இந்தியன்ஸ் 7 வது இடத்திலும் உள்ளது. 

ALSO READ | CSK vs RR: செம ஆட்டம்... சென்னை அணியை கதறவிட்ட ராஜஸ்தான் ராயல்ஸ்

ஆரஞ்சு தொப்பி:
பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) அணியின் கேப்டன் கேஎல் ராகுல் 528 ரன்கள் எடுத்து ஆரஞ்சு தொப்பியை தன் வசம் வைத்துள்ளார்

ஊதா தொப்பி:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (Royal Challengers Bangalore) அணியை சேர்ந்த ஹர்ஷல் பட்டேல் 26 விக்கெட் எடுத்து ஊதா தொப்பி கைப்பற்றி உள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News