MS Dhoni Injury: ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னரே பல்வேறு அணிகளில் இருந்த பல வீரர்கள் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினர். அந்த வகையில், சிஎஸ்கேவின் வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் சௌத்ரியும் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக ஆகாஷ் சிங் என்பவர் அணிக்குள் கொண்டுவரப்பட்டார். அதற்கு முன்னதாக, நியூசிலாந்து வீரர் கைல் ஜேமீசனும் காயம் காரணமாக விலக தென்னாப்பிரிக்க வீரர் சிசாண்டா மகாலாவை அணிக்குள் கொண்டு வந்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரசிகர்கள் அதிர்ச்சி


தற்போது தொடர் தொடங்கிய நிலையில், பென் ஸ்டோக்ஸ், தீபக் சஹார் ஆகியோர் காயம் காரணமாக ஒரு சில போட்டிகளை தவறவிட வேண்டிய சூழல் ஏற்பட்டது. ராஜஸ்தான் உடனான நேற்றைய போட்டியில், சென்னை அணி போராடி தோல்வியடைந்த நிலையில், ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது.


மேலும் படிக்க | IPL 2023: 'நாங்கள் அதனால் தான் தோற்றோம்' - கேப்டன் தோனி கூலாக சொன்னது என்ன?


அதாவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கு முழுங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒரு சில மூவ்மெண்ட்களில் சிக்கல் இருப்பதாக சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்தார். இதுகுறித்து, நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது,"தோனி முழங்கால் காயத்தால் அவதிப்படுகிறார், அதை அவருடைய சில அசைவுகளில் காணலாம். இதனால் அவர்களுக்கு சில சிரமங்கள் ஏற்படுகிறது. 


அவரது உடற்தகுதி ஒரு தொழில்முறை வீரரைப் போன்றது. போட்டி தொடங்குவதற்கு பல மாதங்களுக்கு முன்பே அவர் ஆயத்தங்களைத் தொடங்குகிறார். அவர் ராஞ்சியில் வலைப்பயிற்சி செய்தார். அவர் மேட்ச் ஃபார்முக்குத் திரும்புகிறார், அவர் நன்றாக விளையாடுவதை நீங்கள் பார்க்கலாம்" என்றார். மேலும், அவர் காயத்தால் தொடர்ந்து, அவதிப்பட்டால் தொடரில் இருந்து விலகவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 


தொடரும் துயரம்


இதற்கிடையில், மகலா புதன்கிழமை இரண்டு ஓவர்கள் மட்டுமே வீச முடிந்தது, காயம் காரணமாக மைதானத்தை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. இது பிளெமிங் கூறுகையில், 'மீண்டும் மற்றொரு வீரரின் சேவையை எங்களால் பெற முடியாது. காயமடைந்த வீரர்களின் பிரச்சனையை நாங்கள் ஏற்கனவே கையாண்டு வருகிறோம். அதனால்தான் இந்த எண்ணிக்கையின் அதிகரிப்பு நிறுத்தப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்றார்.



காயம் அடைந்த சென்னை வீரர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் குதிகால் காயம் காரணமாக போட்டியைத் தவறவிட்டார், அதே நேரத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் தொடை காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து ஏறத்தாழ வெளியேறியுள்ளார்.


நியூசிலாந்தில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மத்திஷா பத்திரனா இப்போது குணமடைந்து தேர்வுக்கு தயாராகிவிட்டார் என்று பிளெமிங் கூறினார். மேலும்,'சஹர் சில வாரங்களுக்கு வெளியே இருக்கிறார், அதே நேரத்தில் மகலா இரண்டு வாரங்கள் விளையாட முடியாது. ஸ்டோக்ஸின் காயம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. நியூசிலாந்தில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மத்தியிஷா பத்திரனாவுக்கு கோவிட்-19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டது, ஆனால் அவர் இப்போது போட்டிக்கு தயாராகிவிட்டார்" என்றார். 


மேலும் படிக்க | இது எப்ப... ஆதித்த கரிகாலனுடன் தோனி - விக்ரமின் பல நாள் சீக்ரெட்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ