ஞாயிற்றுக்கிழமை நடந்த 2023 இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) இறுதிப் போட்டி, அகமதாபாத்தில் இடைவிடாத மழையால் கைவிடப்பட்டு, பின்னர் ரிசர்வ் டேக்கு மாற்றப்பட்டது. மாலை முழுவதும் பெய்த கனமழையால் டாஸ் தாமதமாகி பின்னர் அதிக மழை பெய்ய தொடங்கியது. இந்திய நேரப்படி இரவு 10:55 மணிக்கு, நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கோப்பைக்கான இறுதிப் போட்டி திங்கள்கிழமை நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் திங்கட்கிழமை கூட மழை வரும் என்ற முன்னறிவிப்பில், கேள்வி எஞ்சியுள்ளது. இந்நிலையில் ரிசர்வ் நாளிலும் மழை குறுக்கிட்டார் என்ன ஆகும் என்ற கேள்வி பலருக்கு எழுந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | மாஸ்டர் vs மாணவன்: மீண்டும் சாம்பியனாகுமா சிஎஸ்கே... பைனலில் பந்தயம் அடிக்கும் வீரர்கள் யார் யார்?


கடந்த சில நாட்களாக அகமதாபாத்தில் வானிலை சிறப்பாக இல்லை. உண்மையில், வெள்ளிக்கிழமை மழை பெய்ததால் ஜிடி மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையேயான குவாலிஃபையர் 2 தாமதமாக தொடங்கப்பட்டது. இருப்பினும், போட்டி முழுவதும் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து மழை பெய்ததால், போட்டியை திங்கட்கிழமை மாற்றி வைத்தனர்.  இரவு 9:00 மணியளவில், மழை முற்றிலும் நின்று, கவர்கள் எடுக்கப்பட்டு, நடுவர்கள் களத்தில் இறங்கிய போது மீண்டும் இன்று போட்டி நடைபெறும் என்ற நம்பிக்கை இருந்தது.  ஆனால் சிறிது நேரத்தில் மீண்டும் அட மழை தொடங்கியது.  டாஸ் போடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்பே, மழை திரும்பியது மற்றும் நிற்கவே இல்லை.  மீண்டும் கவர்கள் போடப்பட்டு அனைவரும் பெவிலியன் திரும்பினர்.


திங்கட்கிழமை வானிலை நிலவரம்


மாலை 5 மணியளவில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது, சுமார் ஒரு மணி நேரம் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் போட்டி நேரத்தில் மழை பெய்யும் என்று எந்த முன்னறிவிப்பும் இல்லை, இது ஐபிஎல் பைனல் போட்டி நடைபெறுவதற்கான வாய்ப்பைக் குறிக்கிறது.  ரிசர்வ் நாளில் கட்-ஆஃப் நேரத்திற்கான விதிகள் ஞாயிற்றுக்கிழமை இருந்ததைப் போலவே இருக்கும். 9:35 PM முதல் 12:06 AM வரை ஐந்து ஓவர்கள் போட்டிக்கான வாய்ப்புடன் ஓவர்கள் குறைக்கப்படும். மேலும் 1.20 AM வரை மழை நிற்கவில்லை என்றால் சூப்பர் ஓவர் மூலமும் போட்டி நடைபெறும். ரிசர்வ் நாளிலும் விளையாட முடியாத பட்சத்தில், 70 போட்டிகள் கொண்ட லீக் கட்டத்தின் முடிவில் புள்ளிகள் பட்டியலில் அதிக இடத்தைப் பிடித்த அணி வெற்றியாளராக அறிவிக்கப்படும். இதன் மூலம், லீக் கட்டத்தில் 14 ஆட்டங்களுக்குப் பிறகு முதலிடத்தைப் பிடித்த குஜராத் டைட்டன்ஸ், கோப்பையை எடுத்துச் செல்லும்.


சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 


எம்.எஸ். தோனி, ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, ஷிவம் துபே, அஜிங்க்யா ரஹானே, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, மொயீன் அலி, தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா, மதீஷா பத்திரனா, சுப்ரான்சான்ட்னர், சுப்ரான்சான்ட்னர், மிட்செல் சான்ட்னர். ஷேக் ரஷீத், ஆகாஷ் சிங், பென் ஸ்டோக்ஸ், டுவைன் பிரிட்டோரியஸ், சிசண்டா மகலா, அஜய் ஜாதவ் மண்டல், பிரசாந்த் சோலங்கி, சிமர்ஜீத் சிங், ஆர்எஸ் ஹங்கர்கேகர், பகத் வர்மா, நிஷாந்த் சிந்து 


குஜராத் டைட்டன்ஸ் அணி 


விருத்திமான் சாஹா (wk), ஹர்திக் பாண்டியா, சுதர்சன், விஜய் சங்கர், டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், மோஹித் ஷர்மா, நூர் அகமது, முகமது ஷமி, ஜோஷ்வா லிட்டில், ஸ்ரீகர் பாரத், சிவம் மாவி, ஒடியன் ஸ்மித், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், பிரதீப் சங்வான், மேத்யூ வேட், ஜெயந்த் யாதவ், தாசுன் ஷனகவ், , அபினவ் மனோகர், அல்சாரி ஜோசப், தர்ஷன் நல்கண்டே, உர்வில் படேல், யாஷ் தயாள்


மேலும் படிக்க | CSKvsGT IPL 2023 Final: ஐபில் இறுதிப்போட்டி நடைபெறாவிட்டால் என்ன ஆகும்? ரூல்ஸ் இதுதான்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ