Today IPL Match Updates: ஐபிஎல் 2023 தொடரின் 16வது ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) அணிகள் இன்று (ஏப்ரல் 11, செவ்வாய்க்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடக்கவுள்ள போட்டியில் மோதவுள்ளன. இன்றைய ஐபிஎல் போட்டி டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 புள்ளிகள் பட்டியலில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 3 லீக் ஆட்டங்களில் தோல்வியுடன் 10வது இடத்தில் உள்ளது. அதேபோல இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League 2023) 2023 புள்ளிகள் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணி 2 லீக் ஆட்டங்களில் தோல்வி அடைந்ததை அடுத்து 9வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் எந்த அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்யும் என கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இருஅணிகளின் கடைசி போட்டி நிலவரம்
டெல்லி கேபிடல்ஸ் அணி தனது கடைசி ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 57 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த ஐபிஎல் 2023 சீசனில் அவர்களின் மூன்றாவது தொடர்ச்சியான தோல்வியாகும். முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 200 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது, டெல்லி அணி சார்பில் முகேஷ் குமார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கேப்டன் டேவிட் வார்னர் 55 பந்தில் 65 ரன்கள் எடுத்திருந்த போதிலும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 142/9 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.


மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் 2023 இல் அதன் தொடக்க இரண்டு ஆட்டங்களில் தோல்விகளை சந்தித்துள்ளது. இந்த சீசனில் இதுவரை வெற்றி கணக்கை தொடங்காமல் உள்ளது. தனது கடைசி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக ஏழு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தனர். அந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 157/8 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இலக்கை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.



மேலும் படிக்க: ரோகித்துக்கு பாடம் கற்பித்த தோனி - மும்பையில் சம்பவம் செய்த சிஎஸ்கே..!


நேருக்கு நேர் மோதிய கடைசி 5 போட்டிகள் நிலவரம்:
டெல்லி கேப்பிடல்ஸ் மூன்று போட்டிகளிலும், மும்பை இந்தியன்ஸ் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.


அருண் ஜெட்லி ஆடுகளத்தின் நிலவரம்:
டெல்லியின் அருண் ஜேட்லி மைதானத்தில் உள்ள ஆடுகளம், டி20களில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோரான 171 ரன்களுடன் பேட்டிங்கிற்கு உகந்த ஆடுகளமாகும். முதலில் பேட்டிங் செய்யும் அணி அதிக ரன்கள் அடிக்க வாய்ப்புக்கள் அதிகம்.


டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தின் டி20 போட்டி விவரங்கள்


> மொத்தப் போட்டிகள் - 78


> முதலில் பேட்டிங் செய்யும் அணியின் வெற்றி - 35


> இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கு வெற்றி - 43


> முதலில் பேட்டிங் சராசரி ஸ்கோர் - 166


> அதிகபட்ச ஸ்கோர் - டெல்லி கேப்பிடல்ஸ் 231/4


> குறைந்த ஸ்கோர் - டெல்லி கேப்பிடல்ஸ் 66/10


மேலும் படிக்க: IPL 2023: ஒரே நாளில் 3 பேரிடம் அடுத்தடுத்து மாறிய ஆரஞ்சு தொப்பி


டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் களம் இறங்கும் 11 வீரர்கள் (கணிப்பு)
டேவிட் வார்னர்(கேப்டன்), மணீஷ் பாண்டே, ஆர்ஆர் ரோசோவ், ரோவ்மேன் பவல், அபிஷேக் போரல், லலித் யாதவ், அக்சர் படேல்(விக்கெட் கீப்பர்), ஏ நார்ட்ஜே, கேகே அகமது, கேஎல் யாதவ், முகேஷ் குமார்


மும்பை இந்தியன்ஸ் அணியில் களம் இறங்கும் 11 வீரர்கள் (கணிப்பு)
ரோஹித் ஷர்மா(கேப்டன்), எஸ்.ஏ.யாதவ், டிம் டேவிட், திலக் வர்மா, எச் ஷோக்கீன், சி கிரீன், பியூஷ் சாவ்லா, அர்ஷத் கான், இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), ஜே.பி.பெஹ்ரன்டோர்ஃப், ஜோஃப்ரா ஆர்ச்சர்


மேலும் படிக்க: ஒரு டீமையும் விட்டு வைக்காத விராட் கோலி - அடுத்தடுத்து அரைசதம் அடித்து அபார சாதனை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ