GT vs DC Match Preview: இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 தொடரின் 44வது போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இன்றைய (மே 02, செவ்வாய்க்கிழமை) ஐபிஎல் ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) டேவிட் வார்னரின் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) அணிகள் மோதவுள்ளன. இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு போட்டி தொடங்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐபிஎல் 2023 புள்ளிகள் பட்டியல் நிலவரம்:
குஜராத் டைட்டன்ஸ் ஆடிய கடைசி எட்டு ஆட்டங்களில் ஆறில் வெற்றி பெற்றுள்ளது. அதே சமயம் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 8 போட்டிகளில் விளையாடி இரண்டில் மட்டுமே வென்றுள்ளது. இவ்விரு அணிகளும் தங்களுக்குள் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளன. இரண்டு போட்டிகளிலும் குஜராத் டைட்டன்ஸ் வெற்றி பெற்றுள்ளது. 


ஐபிஎல் 2023 புள்ளிகள் பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் தனது எட்டு லீக் ஆட்டங்களில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று ஐபிஎல் 2023 அட்டவணையில் நான்கு புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. 


மேலும் படிக்க - IPL Fights: ஐபிஎல் வரலாற்றின் விறுவிறுப்பான சண்டை காட்சிகள்! இவை மைதானத்தின் களச்சண்டைகள்


நரேந்திர மோடி பிட்ச் ரிப்போர்ட்:
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளத்தை வழங்குவதற்காக அறியப்படுகிறது, பாரம்பரியமாக வேகப்பந்து வீச்சாளர்களால் சுரண்டப்பட்ட சிறந்த பவுன்ஸ் உள்ளது.


ஐபிஎல் 2023 குஜராத் மற்றும் டெல்லி போட்டி எங்கு நடைபெறுகிறது:
குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் 2023 போட்டி அகமதாபாத்தில் உள்ள மோடேரா ஸ்டேடியம் என்று அழைக்கப்படும் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.


குஜராத் மற்றும் டெல்லி போட்டி எப்போது தொடங்கும்:
குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதும் இன்றைய (மே 2, செவ்வாய்கிழமை) ஐபிஎல் 2023 போட்டி இரவு 7:30 மணிக்கு இந்திய நேரப்படி தொடங்குகிறது.


மேலும் படிக்க - ஆண்களை கேமரால காட்ட மாட்டாங்க - வைரலான CSK பதாகை!


குஜராத் மற்றும் டெல்லி போட்டியை எங்கே பார்ப்பது:
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 எச்டி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 எச்டி ஆகிய ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையேயான ஐபிஎல் போட்டி ஒளிபரப்பப்படும்.


ஐபிஎல் 2023 போட்டியை இலவசமாக எப்படி பார்ப்பது:
ஐபிஎல் 2023 போட்டியின் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் மோதும் ஆட்டத்தை நேரடி ஒளிபரப்பு ஜியோ சினிமாவில் இலவசமாக பார்க்கலாம்.


இன்றைய போட்டியில் களம் இறங்கும் 11 வீரர்களின் விவரங்கள் (கணிப்பு) 


குஜராத் டைட்டன்ஸ்: விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ஷுப்மான் கில், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), விஜய் சங்கர், டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், நூர் அகமது, முகமது ஷமி, மோகித் சர்மா, ஜோசுவா லிட்டில்.


டெல்லி கேப்பிடல்ஸ்: டேவிட் வார்னர் (கேப்டன்), பிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), மிட்செல் மார்ஷ், மணீஷ் பாண்டே, பிரியம் கார்க், அக்சர் படேல், ரிபால் படேல், குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, இஷாந்த் சர்மா, முகேஷ் குமார்.


மேலும் படிக்க - சிஎஸ்கே தோல்விக்கு இவர்களே காரணம் - பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ