IPL Fights: ஐபிஎல் வரலாற்றின் விறுவிறுப்பான சண்டை காட்சிகள்! இவை மைதானத்தின் களச்சண்டைகள்

IPL Slapgate Moments: ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய சண்டை காட்சிகள் பற்றிய விஷயங்கள் தற்போது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகிவிட்டது. இதேபோல வைரலான ஐபிஎல் ‘வரலாற்றுச் சண்டைகள்’ சர்ச்சைகளின் தொகுப்பு 

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 2, 2023, 02:13 PM IST
  • ஐபிஎல்லில் மறக்க முடியாத சண்டைத் தருணங்கள்
  • கூல் தோனியும் கோபமடைந்த ஐபிஎல் வரலாறு
  • விராட் கோலிக்கும் கெளதம் கம்பீருக்கும் இடையிலான பழைய மோதல்
IPL Fights: ஐபிஎல் வரலாற்றின் விறுவிறுப்பான சண்டை காட்சிகள்! இவை மைதானத்தின் களச்சண்டைகள் title=

லக்னோ ஏகானா மைதானத்தில் நடந்த சமீபத்திய சண்டை, இதேபோன்ற பல கள சண்டைகளை அசைபோட வைத்துவிட்டது. ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய சண்டை காட்சிகள் பற்றிய விஷயங்கள் தற்போது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகிவிட்டது. இதேபோல வைரலான ஐபிஎல் ‘வரலாற்றுச் சண்டைகள்’ சர்ச்சைகளின் தொகுப்பு இது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் விராட் கோலி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசர் கவுதம் கம்பீர் இருவருக்குமான வாக்குவாதம் வைரலாகும் நிலையில், இதுபோன்ற சண்டைகள் முதல்முறையல்ல என்று சொல்லி, இதற்கு முந்தைய சண்டைகளைப் பற்றி ரசிகர்கள் சுட்டுக்காட்டுகின்றனர்.

விராட் கோலி, கவுதம் கம்பீர் இருவருடன் இதுபோன்ற சண்டையில் போட்டிப்போடும் பிற கிரிக்கெட் வீரர்கள் சிலர் உள்ளனர். யாருக்கும் எவருக்கும் சண்டை? எந்தப் போட்டியில் சண்டை, அபராதம் விதிக்கப்பட்டதா, இல்லை மன்னிப்புக் கோரப்பட்டதா?  ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய சண்டைகள் சிலவற்றைப் பார்ப்போம்.

மேலும் படிக்க | Virat vs Gambhir Fight: நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோலி - கம்பீர்! பரபரப்பான சண்டை காட்சி!
 
கீரன் பொல்லார்டு vs மிட்செல் ஸ்டார்க்
மும்பை இந்தியன்ஸ் வீரர் கீரன் பொல்லார்டு மற்றும் RCB பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் ஐபிஎல் 2014 இல் இருவரும் செய்த சம்பவம் மறக்கமுடியாதது. அது தொடர்பான வார்த்தை பரிமாற்றங்கள் சூடு பிடித்தன.

பொல்லார்ட் மட்டை வீசும்போது, ஸ்டார்க் வீசிய பந்து பவுன்சரானது. பந்து அவர் மீது பட, பதிலுக்கு பொல்லார்ட் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மீது மட்டையை வீசினார். நடுவர்கள், எம்ஐ கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஆர்சிபியின் கிறிஸ் கெயில் ஆகியோர் தலையிட்டு சண்டையை சமாதானப்படுத்தினார்கள்.  

ஐபிஎல் 2023ல் விராட் கோலி vs கவுதம் கம்பீர்
லக்னோவில் நடந்த ஐபிஎல் 2023 போட்டிக்குப் பிறகு ஆர்சிபி பேட்டர் விராட் கோலி மற்றும் எல்எஸ்ஜி வழிகாட்டியான கெளதம் கம்பீர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போட்டி முடிந்ததும் வீரர்கள் கைகுலுக்கிக் கொண்டிருந்தபோது, எல்.எஸ்.ஜி பந்துவீச்சாளர் நவீன்-உல்-ஹக் கோஹ்லியுடன் கை குலுக்குவதைத் தவிர்த்ததில் தொடங்கிய பிரச்சனை, லக்னோ அணியின் வழிகாட்டியான கம்பீர் வந்த பிறகு அதிகமானது.

விராட் கோலி மற்றும் கம்பீர் இருவருக்கும் ஏற்பட்ட வார்த்தைப் போரை அடுத்து, இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. இந்தப் போட்டியில் கோஹ்லி மற்றும் கெளதம் கம்பீருக்குக் கொடுக்கப்படும் போட்டி கட்டணத்துக்கு இணையான தொகையை அபராதமாக செலுத்த வேண்டும் என்று முடிவானது.

ஐபிஎல் 2013ல் விராட் கோலி vs கவுதம் கம்பீர்
RCB பேட்டர் விராட் கோலி மற்றும் KKR கேப்டன் கவுதம் கம்பீர் IPL 2013 இல் முதல் முறையாக சண்டையிட்டனர். 35 ரன்களில் ஆட்டமிழந்த பிறகு KKR பீல்டர்களுக்கு கோஹ்லி பதிலளித்தார், அப்போது KKR கேப்டன் கம்பீருடன் கடும் வார்த்தைப் போர் நடந்தது.

அப்போது கோஹ்லி மற்றும் கம்பீர் இருவருக்கும் போட்டி கட்டணத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

எம்எஸ் தோனி vs நடுவர்கள்
ஐபிஎல் 2019 இல் நடுவர்களுக்கு எதிராக 'கேப்டன் கூல்' எம்எஸ் தோனி, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ராஜஸ்தான் ராயல்ஸின் பென் ஸ்டோக்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டர் மிட்செல் சான்ட்னரின் பந்துவீச்சு தொடர்பான வாக்குவாதம் இது.

ஆவேசமான தோனிபீல்டிங்கிற்கு வந்தார். இறுதி ஓவரில் தோனி நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

ஹர்பஜன் சிங் vs எஸ். ஸ்ரீசாந்த்
மொஹாலியில் நடந்த ஐபிஎல் 2008 போட்டிகளில் பிறகு, மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில்  ஹர்பஜன் சிங், பந்துவீச்சாளர் எஸ். ஸ்ரீசாந்தை அறைந்தார். இந்த சம்பவம் 'ஸ்லாப்கேட்' (Slapgate) என்று அறியப்பட்டது. ஹர்பஜன் சிங் விட்ட அறையில் ஸ்ரீசாந்தின் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. இரு வீரர்களும் பிசிசிஐ ஒழுங்குக் குழு முன் ஆஜரானார்கள்.
  
சவுரவ் கங்குலி vs ஷேன் வார்னே
2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடக்கப் பதிப்பில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பேட்டர் சவுரவ் கங்குலி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ஷேன் வார்னே இருவரிடையேமோதல் ஏற்பட்டது. மூன்றாவது நடுவரால் கங்குலி அவுட் செய்யப்பட்டார், ஆனால் வார்னே மற்றும் RR அணியினர் கங்குலியை டீஸ் செய்ததில், வார்னேவுகும் கங்குலிக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இருவருக்கும் போட்டி கட்டணத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் படிக்க | டென்ஷனான போட்டிகளுக்கு மத்தியில் ‘ஜில்’லாகும் RCB கிரிக்கெட்டர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News