சென்னை அணி ஏமாற்றம்
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டி கடைசி பந்து வரை சென்றது. இரண்டு அணிகளுக்குமே வெற்றிக்கான வாய்ப்பு இருந்த நிலையில், பஞ்சாப் அணி சிறப்பாக விளையாடி வெற்றியை தங்கள் வசப்படுத்தினர். கடைசி 5 ஓவர்களில் பஞ்சாப் அணிக்கு 75 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களத்தில் இருந்த லிவ்விங்ஸ்டோன் அதிரடியாக விளையாடி சிக்சர்களை பறக்கவிட்டார். துஷார் தேஷ்பாண்டே மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் ஓவர்களில் 15 ரன்களுக்கும் மேலாக அடித்தால் பஞ்சாப் அணி வெற்றி பெற முடிந்தது.
கேப்டன் தோனி அதிருப்தி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவிய பிறகு தோல்விக்கான காரணங்களை அடுக்கினார். சேப்பாக்கம் மைதானத்தில் 200 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்து சிஎஸ்கே தோல்வியை தழுவியது ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்த தோனி, பந்துவீச்சாளர்கள் துல்லியமாக பந்துவீச தவறிவிட்டதாக தெரிவித்துள்ளார். சரியான லைன் மற்றும் லென்த்தில் வீசியியிருந்தால் வெற்றி பெற்றிக்கலாம் என கூறிய அவர், சிறிய தவறுகள் போட்டியின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டதாக அதிருப்தி தெரிவித்துள்ளார்.
பயிற்சியாளர் குற்றச்சாட்டு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்வி குறித்து பேசும்போது, பந்துவீச்சாளர்கள் செய்த தவறுகள் காரணமாக அணி தோல்வியை தழுவியாக கூறினார். சரியான லென்த் மற்றும் லைனில் பந்துவீசவில்லை. பஞ்சாப் அணியில் பெரிய ஹிட்டர்கள் இருந்தாலும், களத்தில் அவர்களும் சில தவறுகளை செய்தனர். அதனை நெருக்கடியாக சென்னை அணியின் பந்துவீச்சாளர்கள் அவருக்கு மாற்றவில்லை. அதனை சரியாக செய்திருந்தால் சென்னை அணி வெற்றி பெற்றிருக்க முடியும். அதேபோல் பேட்டிங்கில் இன்னும் 10 முதல் 20 ரன்கள் வரை கூடுதலாக எடுத்திருக்க வேண்டும் என்றும் கூறினார்.
மேலும் படிக்க | IPL 2023: 1000ஆவது போட்டியில் மும்பை சாதனை வெற்றி... சச்சின் ஹேப்பி அண்ணாச்சி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ