IPL 2023 CSK vs PBKS: நடப்பு ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பான நிலையை எட்டியுள்ளது. நான்கு அணிகள் 10 புள்ளிகளுடன், மூன்று அணிகள் 8 புள்ளிகளுடன் தொடரை சுவாரஸ்மாக்கி உள்ளது. குறிப்பாக, கடந்த சீசனில் 9ஆவது இடத்துடன் நிறைவு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இம்முறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொடர்ந்து, மூன்று வெற்றிகளை குவித்த முதலிடத்தில் இருந்த அந்த அணி, ராஜஸ்தான் உடனான கடைசி போட்டியில் படுதோல்வியடைந்து தற்போது நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. சிற்சில குறைகள் இருந்தாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடைந்துள்ள முன்னேற்றம் என்பது மறுக்க இயலாதது.


சிஎஸ்கேவின் பலம்


தொடக்க வீரர்களான கான்வே, ருதுராஜின் நல்ல தொடக்கம், ரஹானே, தூபேவின் தொடர் அதிரடிகள் என பேட்டிங்கிலும், பதிரானா, தீக்ஷனா, ஜடேஜா என பந்துவீச்சில் நல்ல ஃபார்மில் உள்ள வீரர்கள் இருக்கின்றனர். மிடில் ஆர்டர் சற்று பலம் பெற்று, பவர்பிளே ஓவர்களில் பந்துவீச்சில் ரன்களை கட்டுப்படுத்தினால் சிஎஸ்கே அணியின் பெரும் தலைவலி நீங்கிவிடும் என்கின்றனர் கிரிக்கெட் வல்லுநர்கள். 



ஹாம் அண்ட் அவே பாணியில் நடைபெறும் இத்தொடரில், சிஎஸ்கே அணிக்கு மட்டும் அனைத்து போட்டிகளும் ஹோம் மைதானத்தில் நடப்பதை போன்று இருக்கிறது. தோனியின் கடைசி ஐபிஎல் தொடராக இது பார்க்கப்படுவதால், சிஎஸ்கே விளையாடும் போட்டிகளுக்கு, தோனியை பார்ப்பதற்கு என்றே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்திற்கு வருகை தருகின்றனர். கொல்கத்தா, ஜெய்ப்பூர், மும்பை என அனைத்து வெளியூர் மைதானங்களிலும் மஞ்சள் கொடி எங்கும் பறக்கிறது.


மேலும் படிக்க | IPL History: ஐபிஎல் வரலாற்றில் அதிக ஸ்கோர் எடுத்த 5 அணிகளின் ரன்கள்


இதுவரை நேருக்கு நேர்


அந்த வகையில், பஞ்சாப் அணியுடன், சென்னை அணி நாளை (ஏப். 30) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுகிறது. வழக்கம்போல், இந்த போட்டிக்கான டிக்கெட்டுகளும் அதிகமாக விற்பனை ஆகியுள்ள நிலையில், நாளை போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது. இதுவரை இந்த இரு அணிகளும் 27 போட்டிகளில் மோதி, சென்னை 15 போட்டிகளிலும், பஞ்சாப் 12 போட்டிகளிலும் வென்றுள்ளன. 


பஞ்சாப் அணி, லக்னோ உடனான போட்டியில் படுமோசமான தோல்வியை அடைந்த பின், அதில் இருந்து மீள ஒரு பெரும் வெற்றியை குவிக்க நினைக்கும். ஆனால், அதனை சென்னை அணியின் கோட்டையில் செய்வது சற்று கடினமான ஒன்றுதான். எனவே, நாளைய போட்டி குறித்த பிட்ச் ரிப்போர்ட், வானிலை நிலவரம், பிளேயிங் லெவன் கணிப்பு உள்ளவற்றை இங்கு காணலாம். 


பிட்ச் ரிப்போர்ட் மற்றும் வானிலை


எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் உள்ள ஆடுகளம், பேட்டிங், பந்துவீச்சு என இரண்டுக்கும் சமமான வாய்ப்பை வழங்கும். மேலும், அது ஆட்டத்தில் நன்கு சமநிலையான பாதையை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடக்கத்தில் பேட்டர்கள் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதே சமயம் மிடில் ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள். மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 140-150 ஆகும். சென்னையில் நாளைய வெப்பநிலை 28 முதல் 33 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மழைக்கு வாய்ப்பு மிக குறைவு. 


பிளேயிங் லெவன் கணிப்பு


சென்னையின் பிளேயிங் லெவனில் மாற்றமிருக்க வாய்ப்பில்லை. பஞ்சாப் அணியில், அறிமுக வீரராக களமிறங்கிய குர்னூர் பிரருக்கு பதிலாக ஹர்பிரீத் பிரர் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. தோனி தனது சுழற்பந்துவீச்சு பலத்தை முழுவதுமாக பயன்படுத்தி, பஞ்சாப் அணியை வலையில் சிக்க வைக்க முயற்சிப்பார். நாளைய போட்டியில் டாஸ் பெரும் பங்கு வகிக்கும். 



சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்ஷனா, ஆகாஷ் சிங்


பஞ்சாப் கிங்ஸ்: ஷிகர் தவான், அதர்வா டைடே, சிக்கந்தர் ராசா, லியாம் லிவிங்ஸ்டோன், சாம் குர்ரான், ஜிதேஷ் சர்மா, ஷாருக் கான், ஹர்பிரீத் ப்ரார், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங், ககிசோ ரபாடா.


நடப்பு ஐபிஎல் தொடரின் 41ஆவது லீக் ஆட்டமான இது, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை மாலை 3.30 மணிக்கு தொடங்கும். இப்போட்டியை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும், டிஜிட்டல் ஸ்ட்ரீமிங்கில் ஜியோ சினிமாவிலும் கண்டு களிக்கலாம். 


மேலும் படிக்க | DC Player: டெல்லி கேபிடல்ஸ் அணி விருந்தில் பெண்களை சீண்டிய கிரிக்கெட்டர் யார்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ