IPL 2023 : மார்க் வுட் வேகத்தில் சாயந்தது டெல்லி... லக்னோ வெற்றி - என்னவாகும் சிஎஸ்கே?
IPL 2023 LSG vs DC: ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான லீக் போட்டியில் லக்னோ அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லக்னோ பந்துவீச்சாளர் மார்க் வுட் ஆட்ட நாயகனாக தேர்வானார்.
IPL 2023 LSG vs DC: ஐபிஎல் தொடர் மார்ச் 31ஆம் தேதி கோலாகமாக தொடங்கியது. இந்நிலையில், இன்றிரவு நடந்த மூன்றாவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி, டெல்லி கேப்பிடல்ஸ் அணியை சந்தித்தது. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, களமிறங்கிய லக்னோ அணிக்கு அதிகபட்சமாக கைல் மெயர்ஸ் 73 ரன்களையும், நிக்கோலஸ் பூரன் 36 ரன்களையும் குவிக்க லக்னோ அணி, 194 ரன்களை டெல்லி அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. குறிப்பாக, லக்னோ அணிக்கு கடைசி பந்தில் வந்த கிருஷ்ணப்பா கௌதமும் சிக்ஸர் அடித்து மிரட்டினார். கலீல் அகமது, சேத்தன் சக்காரியா ஆகியோர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து, இமலாய இலக்கை தூரத்திய டெல்லி அணிக்கு தொடக்கம் சரியாக அமைந்தாலும், 5 ஓவரில் பந்துவீச வந்த மார்க் வுட் அதனை உடைத்தார். பிருத்வி ஷா, மார்ஷ் ஆகியோர் அடுத்தடுத்து அவரிடம் சரணடைந்தனர். அவரின் அடுத்த ஓவரிலேயே சர்பாரஸ் அகமது ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரூஸோ, கேப்டன் வார்னருடன் ஜோடி சேர்ந்தார். 20 பந்துகளில் 30 ரன்களை குவித்த ரூஸோ, பீஸ்னாய் ஓவரில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து, ரோவ்மான் பாவெல் 1 ரன்னிலும், டெல்லியின் இம்பாக்ட் பிளேயராக களமறங்கிய அமான் ஹகிம் கான் 4 ரன்களிலும் அவுட்டாக, நீண்ட நேரம் போராடிய கேப்டன் வார்னரும் 56 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த வீர்ரகளும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 143 ரன்களையே எடுத்தது. இதன்மூலம், லக்னோ 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மார்க் வுட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, பிளேயர் ஆப் தி மேட்ச் விருதை தட்டிச்சென்றார். வெற்றி பெற்ற லக்னோ அணி தனது அடுத்த போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் உடன் ஏப். 3ஆம் தேதி மோதுகிறது. இப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது.
முன்னதாக, நடைபெற்ற கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில், பஞ்சாப் டக்-வொர்த் லீவிஸ் விதிப்படி 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ