IPL 2023: கோடி ரூபாய் வீரரால் கொல்கத்தா பரிதாபம்... பஞ்சாப் வெற்றி!

IPL 2023 PBKS vs KKR: கொல்கத்தா அணிக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி, டக்-வெர்த் லீவிஸ் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

Written by - Sudharsan G | Last Updated : Apr 1, 2023, 08:10 PM IST
  • மழையால் போட்டி ரத்து செய்யப்பட்டது.
  • அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தல்
IPL 2023: கோடி ரூபாய் வீரரால் கொல்கத்தா பரிதாபம்... பஞ்சாப் வெற்றி! title=

ஐபிஎல் 16ஆவது சீசன் நேற்று கோலகமாக தொடங்கியது. முதல் போட்டியில், குஜராத் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி அசத்தியது. இதைத்தொடர்ந்து, இரண்டாவது லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணி, கொல்கத்தா அணியுடன் மோதியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணிக்கு பிரப்சிம்ரன் சிங், ஷிகார் தவாண் தொடக்க வீரராக களமிறங்கினர். அதில், பிரப்சிம்ரன் சிங் 23 (12) ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கேப்டன் ஷிகர் தவாண் 40 (29) ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

அடுத்த வந்த பனுகா ராஜபக்ச 32 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் 50 ரன்களை அதிரடியாக குவிக்க ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. கடைசி கட்டத்தில் ஜிதேஷ் சர்மா, சிக்கந்தர் ராசா, சாம் கரன், ஷாருக்கான் ஆகியோரும் ரன்களை குவிக்க மொத்தம் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்களை எடுத்தது.  

மேலும் படிக்க | Kane Williamson Injury: ஐபிஎல்-க்கு ஆசைப்பட்டு சர்வதேச கிரிக்கெட்டை தொலைச்ச வில்லியம்சன்..!

டிம் சௌதி 2 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ், சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து, பஞ்சாப் கிங்ஸ் அணி பனுகா ராஜபக்சவை இம்பாக்ட் பிளேயராக மாற்றி, ரிஷி தவாணை உள்ளே கொண்டுவந்தது. கொல்கத்தா தரப்பில் வருண் சக்கரவர்த்தியை வெளியே அனுப்பி, வெங்கடேஷ் ஐயரை பிளேயிங் லெவனில் கொண்டு வந்தது. 

இதையடுத்து, பேட்டிங் செய்த கொல்கத்தா அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. மன்தீப் சிங், குர்பாஸ், அனுகுல் ராய் ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். தொடர்ந்து, இம்பாக்ட் பிளேயரான வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணாவுடன் இணைந்து நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். 46 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், நிதிஷ் 24 ரன்களில் அவுட்டானார். மேலும், ரிங்கு சிங் 4 ரன்னில் வந்த உடனே ஆட்டமிழந்தார். 

சற்றுநேரம் தாக்குபிடித்த வெங்கடேஷ் ஐயர் - ரஸ்ஸல் ஜோடியை சாம் கரன் பிரித்தார். வெங்கடேஷ் ஐயர் 28 பந்துகளில் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ரஸ்ஸல் 19 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, ஒருகட்டத்தில் 16 ஓவர்களில் 146 ரன்களை கொல்கத்தா எடுத்திருந்தபோது, மழைக்குறுக்கிட்டது. 

ஷர்துல் தாக்கூர் 8 ரன்களும், சுனில் நரைன் 7 ரன்களும் எடுத்திருந்தனர். மழை தொடர்ந்து பெய்ததால், இலக்கு 154 ரன்கள் என நிர்ணயிக்கப்பட்டது. இதனால், 7 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

மேலும் படிக்க | IPL 2023: பும்ராவிற்கு பதில் மும்பை அணியில் இணைந்த ஆர்சிபி வீரர்! யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News