IPL 2023: மும்பை இந்தியன்ஸ் பிளேஆஃப்களுக்கு தகுதி பெற முடியுமா?
IPL 2023 Points Table: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் போட்டிக்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி பட்டியலில் 5வது இடத்திற்கு தள்ளப்பட்டது.
IPL 2023 Points Table: இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) மும்பை இந்தியன்ஸ் அணியை விட வெற்றிகரமான அணி வேறு எதுவும் இல்லை. ஐந்து முறை ஐபிஎல் சாம்பியன் அணியான மும்பை தற்போது ஐபிஎல் 2023ல் 13 போட்டிகள் விளையாடி உள்ளது. ஐபிஎல் 2023 அட்டவணையில் நான்காவது இடத்தில் உள்ளது. அதில் 7 வெற்றி மற்றும் 6 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. ஜிடி மற்றும் ஆர்சிபிக்கு எதிரான முந்தைய இரண்டு போட்டிகளிலும் தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்ற பின்னர், மும்பை இந்தியன்ஸ் அணி இறுதி ஓவரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸிடம் தோற்றது. வெற்றிக்கு 11 ரன்கள் எடுக்க வேண்டியிருந்த நிலையில், கடைசி ஓவரில் தோல்வி அடைந்தது. இரண்டு சிறந்த பேட்டரிகள் இருந்த போதிலும், மொஹ்சின் கான் சிறப்பாக பந்து வீசினார்.
மேலும் படிக்க | PBKS vs DC: 15 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி; பஞ்சாப் பிளே ஆஃப் கனவு காலி
14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் இருந்த மும்பை அணி, நேற்று நடைபெற்ற பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிக்கு இடையேயான முடிவிற்கு பிறகு ஐந்தாவது இடத்திற்கு சென்றது. பெங்களூரு அணி தற்போது 4வது இடத்தில் உள்ளது. மும்பை அணி இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிக்கு எதிராக வெற்றி பெற்றால், முதல் நான்கு இடங்களுக்குள் இடம் பெற முடியும். SRHக்கு எதிரான போட்டியில் வெற்றி பெறுவதை ரோஹித் சர்மாவின் மும்பை அணி உறுதி செய்ய வேண்டும். அப்படியானால், MI க்கு 16 புள்ளிகள் இருக்கும், ப்ளேஆஃப்களுக்கு தகுதிபெற போதுமானதாக இருக்கும், ஏனெனில் இந்த ஐபிஎல் 2023 போட்டி மிகவும் சுவாஸ்யமாக உள்ளது. தற்போது வரை ஒரு அணி மட்டுமே வெளியேறி உள்ளது. SRHக்கு எதிராக மும்பை வெற்றிபெறத் தவறினால், மும்பை அணி வெளியேற அதிக வாய்ப்பு உள்ளது.
ஐபிஎல் 2023ன் 65வது ஆட்டத்தில் நேற்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் தோற்கடித்தது. 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி 19.2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது, விராட் கோலி தனது அதிரடி ஆட்டத்தால் 63 பந்துகளில் 100 ரன்கள் குவித்தார். மேலும் 12 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களை விளாசினார். இதற்கிடையில், ஃபாஃப் டு பிளெசிஸ் 47 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உட்பட 71 ரன்கள் எடுத்தார். SRH பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார் மற்றும் டி நடராஜன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். ஆரம்பத்தில், விக்கெட் கீப்பர்-பேட்டர் ஹென்ரிச் கிளாசனின் 51 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 104 ரன்கள் எடுத்ததால் SRH 20 ஓவர்களில் 186/5 ரன்களை எட்டியது. தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. ஆனாலும் பிளே ஆப் சுற்றுக்கு இன்னும் தகுதி பெற வில்லை.
மேலும் படிக்க | IPL Records: ஐபிஎல் வரலாற்றில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பெளலர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ