IPL 2023: சதத்தை தவறவிட்ட ருதுராஜ் - அதிரடியாக ஆடிய சிஎஸ்கே 178 ரன்கள் குவிப்பு
குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் 2023 முதல் போட்டியில் அதிரடியாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக விளையாடி 92 ரன்களில் அவுட்டானார். சிறப்பாக ஆடிய அவர் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கேட்ச் என்ற முறையில் வெளியேறினார்,.
ஐபிஎல் 2023 தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் களமிறங்கின. டாஸ் வெற்றி பெற்ற குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்ய, கேப்டன் தோனி தலைமையிலான சிஎஸ்கே பேட்டிங் இறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய டெவோன் கான்வே ஒரு ரன்னில் ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் இருந்த ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக ஆடினார். பவர் பிளே ஓவர்களில் எதிர்கொண்ட பந்துகளை அவர் சிக்சர்களிலேயே டீல் செய்தார். இதன் மூலம் இந்த ஐபிஎல் தொடரின் முதல் பவுண்டரி, முதல் சிக்சர் அடித்ததுடன் முதல் அரைசதம் அடித்த வீரராகவும் முத்திரை பதித்தார்.
மறுமுனையில் களமிறங்கிய மொயீன் அலி 17 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அறிமுகமானார். அவர் எப்படி விளையாடுவார் என சிஎஸ்கே ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்நோக்கியிருக்கும்போது 7 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.
மேலும் படிக்க | ஐபிஎல் 2023: தமிழ் பாடலுக்கு நடனமாடிய தமன்னா - ராஷ்மிகா: பிரம்மாண்டமாக தொடங்கியது
அடுத்து வந்த அம்பத்தி ராயுடு 12 பந்துகளுக்கு 12 ரன்கள் எடுத்து வெளியேற, இளம் வீரர் ஷிவம் தூபே களம் புகுந்தார். அவருக்கும் எதிர்பார்த்தளவுக்கு பந்து பேட்டில் படவில்லை. சில பந்துகள் அடிக்க முற்பட்டு பேட்டை விசிறினாலும், பந்து பேட்டில் படவில்லை. கடைசியாக அவர் 18 பந்துகளில் 19 ரன்களில் அவுட்டானார்.
அவர் அவுட்டான பிறகே தோனி வரவேண்டும் என ரசிகர்கள் கோஷம் எழுப்பிக் கொண்டிருக்க ஜடேஜா வந்தார். அவர் அடிப்பார் என நினைத்த நேரத்தில் ஒரு ரன்களில் அவுட்டானர். அதன்பிறகே தோனி வந்தார். இதற்கிடையில் 92 ரன்கள் எடுத்திருந்த ருதுராஜ் கெய்க்வாட் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். கடைசியில் தோனி சிக்சர் பவுண்டரி என வாண வேடிக்கை காட்ட 20 ஓவர் முடிவில் சிஎஸ்கே 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தனர். ஒருகட்டத்தில் சிஎஸ்கே 200 ரன்கள் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்புடன் ஒப்பிட்டால் இது குறைவான ஸ்கோர் தான். இதனைத் தொடர்ந்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடியது.
மேலும் படிக்க | IPL 2023: இம்பாக்ட் பிளேயர் ரூல்: இவங்களுக்கு இனி வேலை இல்லை - தோனி ஓபன் டாக்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ