IPL 2023 Updates: நடப்பு ஐபிஎல் வழக்கம் போல் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. சென்னையின் அணி வெற்றி, நடப்பு சாம்பியன் குஜராத் அணியின் அசைக்க முடியாத பார்ம், ஆர்சிபியின் அதிரடி என தொடர் ரசிகர்களுக்கு நாளுக்கு நாள் விறுவிறுப்பை அதிகமாக்குகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தங்களுக்கு பிடித்த அணிகளின் போட்டியை மட்டுமின்றி, அனைத்து போட்டிகளையும் காணும் ஆர்வமும் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், மொபைல், லேப்டாப் போன்ற சாதனங்களில் ஜியோ சினிமாஸ் மூலம் வழங்கப்படும் இலவச நேரடி ஒளிப்பரப்பு காரணத்தால்தான் எனவும் கூறப்படுகிறது.  


இம்பாக்ட் பிளேயர் 


அப்படியிருக்க அனைத்து அணிகளையும், அதன் நகர்வுகளையும் ரசிகர்கள் நேரலையின் மூலமாக கவனிக்கத் தொடங்கிவிட்டனர். மேலும், ஒவ்வொரு அணிகளும் தற்போதைய இம்பாக்ட் பிளேயர் விதியையும் சாமர்த்தியமாக பயன்படுத்தி, தங்களின் பிளேயிங் லெவனையும் பேலன்ஸ் செய்து வருகின்றனர். 


மேலும் படிக்க | யார் இந்த சாய் சுதர்ஷன்? விரைவில் இந்திய அணியில்... பாராட்டி தள்ளிய ஹர்திக் பாண்டியா


மேலும், இந்த சீசனில் பல முக்கிய வீரர்கள் காயம் காரணமாகவும், வேறு சில காரணங்களுக்காகவும் தொடரில் இருந்து விலகியுள்ளனர். இதற்காக, அணிகளும் மாற்று வீரர்களை தேர்வு செய்து வருகின்றன. இந்நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஷகிப் அல் ஹாசன், வங்கதேச அணிக்காக அதிக போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதற்காக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார்.  



இந்நிலையில், அவருக்கான மாற்று வீரரை கேகேஆர் அணி இன்று அறிவித்துள்ளது. இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் கேகேஆர் அணிக்காக ஒப்பந்தமாகியுள்ளார். அந்த அணிக்கு குர்பாஸ் அகமது, மன்தீப் சிங்குடன் தொடக்க வீரராக களமிறங்குகிறார். மந்தீப் சிங்கை சற்று கீழே இறக்கி, குர்பாஸ் உடன் ராயை ஓப்பனிங்கில் களமிறக்க கேகேஆர் திட்டமிட்டுள்ளது. கடந்த போட்டியில், பேட்டிங்கில் கேகேஆர் அணி சற்று சொதப்பியிருந்த நிலையில், ஜேசன் ராயின் வருகை அவர்களுக்கு கூடுதல் பலத்தை அளித்துள்ளது. 


ஏன் ஜேசன் ராய்?


மேலும், அவர் முழுமையான பேட்டர் என்ற நிலையில், முதலில் பேட்டிங் செய்யும்போது, அவரை களமிறக்கிவிட்டு, பின்னர் அவரை இம்பாக்ட் விதியின்படி, வெளியே அனுப்பி, ஒரு வெளிநாட்டு பந்துவீச்சாளரை உள்ளே கொண்டுவர முடியும் என்பதால், கேகேஆர் இதனை போனஸாக நினைக்கிறது. மேலும், விரைவில் ஜேசன் ராய் கேகேஆர் அணியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 



கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் தொடரில் இருந்து விலகிய நிலையில், நிதிஷ் ராணா கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். கேகேஆர் அணி, பெங்களூரு அணியுடன் நாளை மோத உள்ளது. இப்போட்டி, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. 


மேலும் படிக்க | RR vs PBKS: இன்றைய ஐபிஎல் போட்டியை எப்போது, ​​​​எங்கு, எப்படி நேரலையில் பார்க்கலாம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ