IPL 2023: குஜராத்திடம் மீண்டும் மீண்டும் உதை வாங்கும் ராஜஸ்தான்... டாப்பில் ஹர்திக் படை!
IPL 2023 RR vs GT: ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், குஜராத் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதலிடத்தில் நீடிக்கிறது.
IPL 2023 RR vs GT: நடப்பு ஐபிஎல் தொடரின் 48ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன், கடந்தாண்டு இரண்டாம் இடம்பிடித்த ராஜஸ்தான் அணி இன்று மோதியது. ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு தொடக்க சரியாக அமையவில்லை. பட்லர் 8 ரன்களில் ஆட்டமிழக்க, சாம்சன் களமிறங்கி சற்று அதிரடி காட்டினார். இருப்பினும், 6ஆவது ஓவரில் ஜெய்ஸ்வால் 14 ரன்களுக்கும், 7ஆவது ஓவரில் சாம்சன் 30 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
சொதப்பிய பேட்டிங்
அடுத்து வந்த அஸ்வின் 2, ரியான் பராக் 4, படிக்கல் 12, ஹெட்மயர் 7, ஜூரேல் 9 என அனைவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க 17.5 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 118 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. ரஷித் கான் 3, நூர் அகமது 2, முகமது ஷமி, பாண்டியா, லிட்டில் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். 119 என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி ஆரம்பம் முதலே அதிரடி கைக்கொண்டது
மேலும் படிக்க | உங்கள் கேப்டன் தோனியா கோலியா... டக்னு வந்த கேள்வி - ரூட் போனது யார் பக்கம்?
ஹர்திக் அதிரடி
அதன்படி, கில் - சாஹா ஜோடி 9.1 ஓவர்களில் 71 ரன்களை குவித்தது. அப்போது, கில் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இருப்பினும், சாஹா - ஹர்திக் ஜோடி விரைவாகவே இலக்கை எட்டி வெற்றி பதிவு செய்தது. அதன்மூலம், குஜரார்த 13.2 ஓவர்களிலேயே 119 ரன்கள் எடுத்து, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சாஹா 41 ரன்களுடனும், ஹர்திக் பாண்டியா 3 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 15 பந்துகளில் 39 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சஹால் மட்டும் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய ரஷித் கான் ஆட்டநாயகனாக தேர்வானார்.
புள்ளிகள் பட்டியல்
குஜராத் அணி 10 போட்டிகளில் விளையாடி 14 புள்ளிகளுடன் தற்போது முதலிடத்திலும், ராஜஸ்தான் அணி 10 போட்டிகளில் விளையாடி 10 புள்ளிகளுடன் தற்போது 4ஆவது இடத்திலும் உள்ளன.
நாளைய போட்டிகள்
நாளை (மே 6) சனிக்கிழமை என்பதால், இரண்டு போட்டிகள் நடைபெறும். மாலை 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியில், சென்னை - மும்பை அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில், டெல்லி - பெங்களூரு அணிகள் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் விளையாடுகின்றன.
மேலும் படிக்க | IPL 2023: ஐபிஎல் மட்டுமல்ல WTC பைனலுக்கும் டாட்டா... கேஎல் ராகுல் உருக்கம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ