IPL 2023 MS Dhoni: நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்களின் இரண்டாம் பாதி தொடங்கிவிட்டது எனலாம். டெல்லி, ஹைதராபாத் அணிகள் புள்ளிப்பட்டியலில் பின்தங்கியிருக்கின்றன. அவை மீண்டு வருவதற்கான காலம் இருக்கிறது என்றாலும், மற்ற அணிகளும் சிறப்பாகவே விளையாடி வருகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அசுர பலத்துடன் ஆர்ஆர்


நேற்று (ஏப். 27) நடைபெற்ற லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் டாப்பராக உள்ளது. சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியில் தரமான பேட்டர்கள் மட்டுமின்றி உலகத்தர சுழற்பந்துவீச்சாளர், வேகப்பந்துவீச்சாளர்கள், ஆல்-ரவுண்டர்கள் இருப்பதால் இத்தொடரில் அசுர பலத்துடன் விளையாடி வருகிறது. 


2ஆவது தோல்வி


ஏற்கெனவே, சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியிருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் தற்போது மீண்டும் சென்னையை அணியை தனது சொந்த மண்ணிலும் வீழ்த்தியுள்ளது. இதனால், 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த சிஎஸ்கே, ரன் ரேட் அடிப்படையில் 3ஆம் இடத்திற்கு வீழ்ச்சியடைந்தது. 


மேலும் படிக்க | ஜெய்பூர் மைதானத்தை நான் மறக்கமாட்டேன் - தோனி நெகிழ்ச்சியாக சொன்ன காரணம்


ஜடேஜாவின் சுணக்கம்


சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்து துறையிலும் தரமான வீரர்கள் இருந்தாலும் சிறு சிறு சிக்கல்கள் அணிக்குள் நிலவுகிறது. அம்பதி ராயுடுவின் மோசமான பார்ம், பந்துவீச்சு பவர்பிளே ஓவர்களில் அதிக ரன்களை கொடுப்பது குறிப்பாக, ஜடேஜாவின் சொதப்பல் பேட்டிங். 


ரசிகர்களின் விருப்பம்


நேற்றைய போட்டிகளிலும் இந்த அத்தனை குறைகள் தான் சிஎஸ்கேவின் வெற்றியை தடுத்தது எனலாம். தூபே ரன்களை குவித்துக்கொண்டிருந்தபோது, ஜடேஜா பவுண்டரிக்கு போகாமல் ஸ்ட்ரைக் ரோடேட் செய்தது மிகவும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. அடித்து விளையாடி ரன்களை எடுத்திருக்க வேண்டும் அல்லது அவுட்டாகி அடுத்த பேட்டருக்கு (தோனி) வாய்ப்பளித்திருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. 


பிராவோ பதில்


மேலும், தோனியை ஜடேஜாவுக்கு முன்னர் ஏன் களமிறக்கவில்லை என கேள்வியும் எழுப்பப்பட்டது. அந்த வகையில், இந்த கேள்விக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சு பயிற்சியாளர் டுவைன் பிராவோ செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில்,"அதுதான் அவர் (தோனி) பேட்டிங் செய்ய வேண்டிய ஆர்டர். எல்லோரும் அவரை விட அதிகமாக பேட்டிங் செய்கிறார்கள். 


பினிஷிங் தான் பொறுப்பு 


மேலும் ஜடேஜா, ராயுடு மற்றும் துபே போன்றவர்களுக்கு முடிந்தவரை பல வாய்ப்புகளை வழங்க அவர் விரும்புவதால், டவுன் தி ஆர்டரில், பேட் செய்ய வேண்டிய பொறுப்பையும் உரிமையையும் அவர் எடுத்துக்கொள்கிறார். பினிஷிங் பொறுப்பில் அவர் விளையாடுவதுதான் மிகழ்ச்சி அளிக்கிறது.


சிஎஸ்கே அணியின் மன உறுதி மிகவும் அதிகமாக உள்ளது, அதற்கும் போட்டியின் முடிவுகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நாங்கள் நன்றாகச் செயல்படுகிறோமா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் பொதுவான செயல்பாடுகளை கண்காணிக்கும் அணியாக இருக்கிறோம். 


ஆனால், நாங்கள் சிறப்பாகச் செயல்படும் போது அது நன்றாகவே இருக்கும். இதுவரை, நாங்கள் ஒரு நேர்மறையான பாணியில் சீசனைத் தொடங்கியுள்ளோம். மேலும், இதே வேகத்தைத் தக்க வைத்துக் கொண்டு எதிர்வரும் போட்டிகளில் வெற்றியைத் தொடர வேண்டும் என விரும்புகிறோம்" என்றார். 


மேலும் படிக்க | 15 கோடிக்கு வாங்கினாலும் ஒழுங்காக ஆடாத இஷான் கிஷான் மீது அதிருப்தியில் ரசிகர்கள்
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ