ஜெய்பூர் மைதானத்தை நான் மறக்கமாட்டேன் - தோனி நெகிழ்ச்சியாக சொன்ன காரணம்

ஜெய்ப்பூர் மைதானம் என் கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கும் ஓர் இடம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 28, 2023, 09:11 AM IST
ஜெய்பூர் மைதானத்தை நான் மறக்கமாட்டேன் - தோனி நெகிழ்ச்சியாக சொன்ன காரணம் title=

ராஜஸ்தான் இமாலய இலக்கு

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான போட்டிக்குப் பிறகு பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, ஜெய்ப்பூர் மைதானத்தில் அடித்த 183 ரன்களே என் கிரிக்கெட் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்துக்கு காரணமாக அமைந்ததாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் போட்டி ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில், ஜெய்ஷ்வால் ஆடிய அதிரடி ஆட்டத்தால் 5 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய ஜெய்ஷ்வால் 43 பந்துகளில் 77 ரன்களும், துருவ் ஜூரல் 25 பந்துகளில் 34 ரன்களும் எடுத்து அணியின் இமாலய இலக்கை உறுதி செய்தனர்.

சிஎஸ்கே அணி ஏமாற்றம்

இதன்பிறகு சேஸிங் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ அணி எதிர்பார்த்த அளவுக்கு பேட்டிங் செய்ய முடியவில்லை. ருதுராஜ் கெய்க்வாட் ஒருபுறம் அதிரடியாக விளையாடிக் கொண்டிருக்க, மறுமுனையில் டெவோன் கான்வே தடுமாறிக் கொண்டிருந்தார். 29 பந்துகளில் 47 ரன்கள் விளாசி ருதுராஜ் அவுட்டாகி வெளியேற, 16 பந்துகளில் வெறும் 8 ரன்கள் அடித்திருந்த டெவோன் கான்வேவும் பெவிலியன் திரும்பினார். மிடில் ஆர்டரில் ஷிவம் துபே அதிரடியாக விளையாடி 52 ரன்கள் எடுத்தபோதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வெற்றி பெற முடியவில்லை. முடிவில் 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து 3வது இடத்துக்கு வந்தது.

மேலும் படிக்க | 15 கோடிக்கு வாங்கினாலும் ஒழுங்காக ஆடாத இஷான் கிஷான் மீது அதிருப்தியில் ரசிகர்கள்

எம்எஸ் தோனி நெகிழ்ச்சி

2020க்குப் பிறகு கடைசியாக இரு அணிகளும் மோதிய 7 போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியே 6 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. போட்டிக்குப் பிறகு பேசிய எம்எஸ் தோனி, எதிர்பார்த்த அளவுக்கு அதிகமாக ஆர்ஆர் ரன்களை குவித்துவிட்டதாக தெரிவித்தார். பத்திரன்னா சிறப்பாக பந்துவீசினாலும், எதிர்பாராத விதமாக ரன்கள் எதிரணிக்கு கிடைத்துவிட்டதாகவும், இதில் அவரை குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை என கூறினார். 

அடுத்த போட்டிகளில் இன்னும் சிறப்பாக விளையாடுவோம், அதற்கு முன்பாக இந்த போட்டியில் செய்திருக்கும் சில தவறுகளை சரி செய்வோம் எனக் கூறிய தோனி, ஜெய்ப்பூர் மைதானத்தில் ரசிகர்கள் கொடுத்திருக்கும் ஆதரவுக்கு நன்றி கூறினார். இந்த மைதானத்தில் தான் 183 ரன்கள் அடித்ததாகவும், அதுவே தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்துக்கு விதையாக அமைந்ததாகவும் நெகிழ்ச்சியுடன் கூறினார். இதனால் ஜெய்ப்பூர் மைதானம் எப்போதும் என் கிரிக்கெட் வாழ்க்கையின் நினைவுகளில் முதன்மையான இடத்தில் இருக்கும் என்றும் தோனி தெரிவித்தார்.

மேலும் படிக்க | அடுத்த சீசனில் அபார விலைக்கு ஏலம் போகப்போகும் இந்தியாவின் இளம் கிரிக்கெட்டர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News