Virat Kholi: ஒரு டீமையும் விட்டு வைக்காத விராட் கோலி - அடுத்தடுத்து அரைசதம் அடித்து அபார சாதனை
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக அரைசதம் அடித்த விராட் கோலி, இப்போது விளையாடிக் கொண்டிருக்கும் அனைத்து ஐபிஎல் அணிகளுக்கு எதிராகவும் அரைசதம் அடித்த ஒரே வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரானார்.
ஆர்சிபி அணியில் இந்த ஆண்டு ஓபனிங் இறங்கி விளையாடி வரும் விராட் கோலி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி அரைசதம் விளாசினார். பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பெங்களூரு அணி களமிறங்கியது. பாப் டூபிளசிஸ் மற்றும் விராட் கோலி இருவரும் ஓபன்னிங் இறங்கினர். ஆரம்பம் முதலே விராட் கோலி அடித்து ஆடத் தொடங்கினார். விக்கெட் இழக்காமல் டூபிளசிஸ் நிதான ஆட்டத்தை விளையாட, விராட்டின் பேட்டில் பந்துகள் எல்லாம் எல்லைக்கோட்டை நோக்கி ஓடின. இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 5.3 ஓவர்களில் 50 ரன்களை கடந்தது.
மேலும் படிக்க | IPL 2023: ஹைதராபாத் அணிக்கு முதல் வெற்றி... பஞ்சாப்புக்கு முதல் தோல்வி!
தொடர்ந்து அதிரடியாக விளையாடிய விராட் கோலி, இந்த ஐபிஎல் போட்டியில் 2வது அரைசதத்தை அடித்தார். இதன் மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் இப்போது விளையாடிக் கொண்டிருக்கும் அனைத்து அணிகளுக்கு எதிராக அரைசதம் விளாசியிருக்கும் ஒரே பிளேயர் என்ற வரலாற்றை படைத்தார் விராட் கோலி. 44 பந்துகளில் 66 ரன்கள் எடுத்திருந்தபோது அவர் அமித் மிஸ்ரா பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். அவரின் ஆட்டமிழப்புக்குப் பிறகு மேக்ஸ்வெல்லுடன் ஜோடி சேர்ந்தார் பாப் டூபிளசிஸ். இரண்டு பேருமே அதிரடி காட்ட ஆர்சிபி அணியின் ஸ்கோர் 10 ரன்ரேட்டுக்கும் குறையாமல் சென்று கொண்டிருந்தது.
இதனால் 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய கேப்டன் டூபிளசிஸ் 49 பந்துகளில் 79 ரன்கள் குவித்தார். இதில் 5 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடங்கும். மறுமுனையில் கடைசி பந்தில் விக்கெட்டை பறிகொடுத்த மேக்ஸ்வெல் 29 பந்துகளில் 59 ரன்கள் விளாசினார். இதில் 6 சிக்சர்களும் 3 பவுண்டரிகளும் அடங்கும். பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம் சொந்த மைதானம் என்பதால் ஆர்சிபி அணி காட்டிய வாணவேடிக்கை அந்த அணியின் ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது.
மேலும் படிக்க | சென்னை அணிக்கு வரப்போகும் இலங்கை நட்சத்திரம்: விமானத்தில் புறப்பட்டாச்சு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ