IPL 2023 Virat Kohli: நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் சுற்று போட்டிகள் வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைகிறது. அன்று இரவு நடைபெறும் கடைசி பெங்களூரு - குஜராத் போட்டி வரை பிளேஆப் குறித்த கேள்விகள் இருந்துகொண்டே தான் இருக்கும் எனலாம். அதாவது, எந்த அணிகள் பிளேஆப்பில் எந்த போட்டிகளில் விளையாடப்போகிறார்கள் என்பதை அறியவும் நாம் கடைசி போட்டியின் முடிவை நோக்கி காத்திருக்க வேண்டிய தேவை உருவாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஊக்கம் அளித்த சதம் 


இத்தனை பரபரப்புக்கும் முதன்மையாக அமைந்தது, விராட் கோலியின் நேற்றைய சதம் எனலாம். பெரும் இக்கட்டான சூழலில் பெங்களூரு அணிக்கும், விராட் கோலிக்குமே அந்த சதம் ஊக்கத்தை அளித்திருக்கிறது எனலாம். விராட் கோலி 45 பந்துகளில் 65 ரன்களை எடுத்திருந்த நிலையில், அடுத்த 17 பந்துகளில் அதிரடி காட்டி சதத்தை பதிவு செய்தார். 


1490 நாள்களுக்கு பின்...


சுமார் 1490 நாள்களுக்கு பிறகு, விராட் கோலி ஐபிஎல் தொடரில் சதம் அடித்துள்ளார். அதாவது, 2016ஆம் ஆண்டிற்கு பின் தற்போது தான் அவர் சதம் அடித்தார். மேலும், இது அவரது 6ஆவது ஐபிஎல் சதமாகும். கிறிஸ் கெயிலும் ஐபிஎல் தொடரில் 6 சதங்களை பதிவு செய்துள்ளார். இதுதான் ஐபிஎல் தொடரில் ஒரு வீரரின் அதிக சதங்களாகும். நடப்பு தொடரில் விராட் கோலி 500 ரன்களையும் தாண்டியுள்ளார். 



மேலும் படிக்க | IPL 2023: மும்பை இந்தியன்ஸ் பிளேஆஃப்களுக்கு தகுதி பெற முடியுமா?


ஆட்ட நாயகனாக தேர்வான அவர், சதம் அடித்து போட்டி முடிந்ததும் அவர் தனது மனைவி அனுஷ்கா சர்மாவிடம் வீடியோ கால் பேசியது பலரையும் நெகிழ்ச்சியடைய செய்தது. நேற்றைய போட்டி, ஹைதராபாத் நகரில் நடைபெற்றதால், போட்டியை காண அனுஷ்கா சர்மா வந்திருக்கவில்லை. எனவே, சதம் அடித்த மகிழ்ச்சியை அவர் தனது மனைவியிடம் வெளிக்காட்டினர். அவர் அனுஷ்கா சர்மாவிடம் வீடியோ கால் பேசிய வீடியோ, புகைப்படம் ஆகியவை வைரலாகி வருகிறது.



கடும் போட்டி


நேற்றைய ஹைதராபாத் உடனான போட்டியில் பெங்களூரு அணி மிகப்பெரிய வெற்றியை குவித்ததன் மூலம் பல அணிகள் கலக்கத்தில் உள்ளன. குஜராத் அணி பிளேஆப் தொடருக்கு முன்னேறிவிட்டது. இந்த சூழலில், சென்னை, லக்னோ, மும்பை, பெங்களூரு, ராஜஸ்தான், கொல்கத்தா, பஞ்சாப் உள்ளிட்ட அணிகள் 2ஆவது, 3ஆவது, 4ஆவது இடத்திற்கு போட்டியிடுகின்றன.  


யாருக்கு வாய்ப்பு?


இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியை ராஜஸ்தான் வீழ்த்தும்பட்சத்தில் மும்பை அணியை விட அதிக நெட் ரன்ரேட்டில் இருப்பதால், ராஜஸ்தான் 5ஆவது இடத்திற்கு முன்னேறும். ஒருவேளை ராஜஸ்தான் பெங்களூருவை விட அதிக நெட் ரன்ரேட்டில் வெற்றிபெறும்பட்சத்தில் 4ஆவது இடத்திற்கு முன்னேறலாம். அனைத்து அணிகளும் வெற்றிபெற வேண்டிய சூழலில் உள்ளன. 


இருப்பினும், பெங்களூரு அணி அடுத்த போட்டியில் வெற்றி பெற்றால் அந்த அணிக்கே பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும். மும்பை அணி சன்ரைசர்ஸ் உடனான தனது கடைசி லீக் போட்டியில் வெற்றி பெற்றாலும், அந்த அணிக்கு நெட் ரன்ரேட் என்பது பின்னடைவாக அமைய வாய்ப்புள்ளது. 


மேலும் படிக்க | 2023 ODI உலகக் கோப்பை போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்பிருக்கும் 5 இளம் வீரர்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ