IPL 2023: சிஎஸ்கே, மும்பைக்கு பிறகு ஆர்சிபி தான் பெஸ்ட் டீம் - விராட் கோலி ஓபன் டாக்
சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகளுக்கு அடுத்தபடியாக ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணி ஆர்சிபி மட்டுமே என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2023 தொடரின் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் அந்த அணி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது. முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி தட்டு தடுமாறி 171 ரன்கள் எடுக்க, சேஸிங் செய்த ஆர்சிபி அணி, விராட் கோலி - டூபிளசிஸ் அதிரடி ஆட்டத்தால் 16.2 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டி ரசிகர்களை மலைக்க வைத்தது. மும்பை அணியே எதிர்பார்க்காத அளவுக்கு விராட் கோலி மற்றும் டூ பிளசிஸின் அதிரடி ஆட்டம் இருந்தது.
பாப் டூபிளசிஸ் 43 பந்துகளில் 73 ரன்களும், விராட் கோலி 49 பந்துகளில் 82 ரன்களும் எடுத்தனர். விராட் கோலி கடைசி வரைக்கும் ஆட்டம் இழக்கவே இல்லை. இந்த ஆண்டு கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கும் ஆர்சிபி அணி, சிறப்பாக ஐபிஎல் தொடரை தொடங்கியிருக்கிறது. இது குறித்து விராட் கோலி போட்டிக்குப் பிறகு பேசும்போது, மும்பை இந்தியன்ஸ் அணியுடனான போட்டி வெற்றியுடன் தொடங்கியிருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அடுத்தடுத்த போட்டிகளிலும் இதேபோன்று விளையாடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆர்சிபி அணி மீது பொதுவாக கோப்பையை வெல்லவில்லை என்ற விமர்சனம் இருக்கிறது.
அது உண்மை தான். சென்னை 4 முறையும் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறையும் கோப்பைகளை வென்றிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு அடுத்தபடியாக பிளே ஆஃப் சுற்றுக்கு அதிக முறை சென்ற அணி என்ற பெருமை ஆர்சிபி அணிக்கு மட்டுமே இருக்கிறது. ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி 3வது இடத்தில் இருக்கிறது என்பதே என்னுடைய கருத்து. 8 முறை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது என விராட் கோலி தெரிவித்தார்.
அடுத்த போட்டி ஆர்சிபி அணிக்கு ஏப்ரல் 6 ஆம் தேதி இருக்கிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணி ஏப்ரல் 8 ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பை வான்கடே மைதானத்தில் சந்திக்க உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ