வரும் IPL 2018 போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆலோசகராக களம் இரங்குகிறார் ஷேன் வார்ன்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2008 ஆண்டு நடைப்பெற்ற IPL போட்டியின் போது, ராஜஸ்தான் அணியின் தலைவர் மற்றும் பயிற்சியாளர் பொருப்பிலும் இருந்து அணியின் வெற்றிக்கு உருதுணையாக இருந்தவர் ஷேன் வார்ன்.


இந்நிலையில் தற்போது அதே அணியில், அணியில் ஆலசோகராக பணியாற்ற வருகிறார். முன்னதாக மும்பை இந்தியான்ஸ் அணியின் பந்துவீச்ச ஆலோசகராக அந்த அணியின் முன்னாள் வீரர் லதீஷ் மலிங்கா இணைந்தார். அதேப்போல் தற்போது ராஜஸ்தான் அணியின் ஆலோசகராக அந்த அணியின் முன்னாள் வீரர் களம் இரங்குகிறார்.


இதுகுறித்து அணியின் சக உறிமையாளர் மனோஜ் படேல் தெரிவிக்கையில், "வார்ன் அவர்களை அணிக்கு மீண்டும் கொண்டுவருவதில் மிகுந்த மகிழ்ச்சி, அவருடை ரசிகர்களுக்கு அவரை மீண்டும் அளிப்பதில் பெருமிதம்" என தெரிவித்துள்ளார்.


ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஷேன் வார்ன், தனது லெக் ஸ்பின் பந்துவீச்சினால் 52 IPL போட்டிகளில் 56 விக்கெட்டுகளை பதிவு செய்துள்ளார். பின்னர் கடந்த 2011 ஆண்டில் IPL தொடரில் இருந்து விலகிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது!