ஐபிஎல் 2022 தொடர் மார்ச் 26 ஆம் தேதி தொடங்க உள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கும் முதல் போட்டியில் மகேந்திரசிங் தோனி தலைமையிலான தோனி அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடரஸ் அணியும் மோத உள்ளன. கடந்த ஐபிஎல் போட்டிகளில் 8 அணிகள் மட்டுமே விளையாடி வந்த நிலையில், இந்த ஆண்டு முதல் குஜராத் மற்றும் அகமதாபாத் என மொத்தம் 10 அணிகள் களம் காண உள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | மரண தண்டனை பெற்ற ஒரே கிரிக்கெட் வீரர்! காதலில் ஏமாந்தவர்


பெங்களூரு அணியைத் தவிர மற்ற அனைத்து அணிகளும் தங்கள் அணிக்கான கேப்டன் யார்? என்பதை அறிவித்துவிட்டன. பெங்களூரு அணியின் புதிய கேப்டன் யார்? என்பது மட்டும் இன்னும் சஸ்பென்ஸாக உள்ளது. மார்ச் 12 ஆம் தேதி புதிய கேப்டன் யார்? என்பதை அந்த அணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ள நிலையில், லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகுவதாக கொடுத்த ராஜினாமா கடிதத்தை, அந்த அணி நிர்வாகம் இதுவரை ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது.



இதனால், மீண்டும் விராட் கோலியே கேப்டனாக அறிவிக்கப்படுவாரோ? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனிடையே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வந்த பாப் டூபிளசிஸ் மற்றும் கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்த தினேஷ் கார்த்திக் ஆகியோரில் ஒருவர் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகபட்ச வாய்ப்பு டூபிளசிஸூக்கு இருப்பதாக கூறப்படுகிறது. ஆர்சிபி அணியின் புதிய கேப்டன் யார்? என்பதை அறிவிக்க இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருப்பதால், அந்த அறிவிப்பை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். 


மேலும் படிக்க | கோவாவில் காதலியை கரம் பிடித்த இந்திய இளம் வீரர்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR