கோவாவில் காதலியை கரம் பிடித்த இந்திய இளம் வீரர்

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான ராகுல் சாகர், நீண்ட நாள் காதலியான இஷானியை திருமணம் செய்து கொண்டார். 

 

கோவாவில் நடைபெற்ற இந்த நட்சத்திர தம்பதியின் திருமண விழாவில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். 

1 /5

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் சுழற்பந்துவீச்சாளரான ராகுல் சாஹர், இஷானி என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். 

2 /5

இவர்கள் இருவருக்கும் இடையே 2019 ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. பின்னர் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக திருமணம் தள்ளிப்போனது.

3 /5

நிச்சயதார்த்தம் முடிவடைந்து சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது ராகுல் சாகர் மற்றும் இஷானி ஆகியோர் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.

4 /5

மார்ச் 12 ஆம் தேதி ஆக்ராவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்ட வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராகுல் சாஹர் இதுவரை இந்திய அணிக்காக ஆறு 20 ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

5 /5

கடந்த சில ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வந்த ராகுல் சாகர், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாட உள்ளார்.