இந்தியன் பிரீமியர் லீக்கில் ஒவ்வொரு மூன்று வருடத்திற்கு ஒரு முறையும் மெகா ஆக்ஷன் (Mega Auction)நடத்தப்படும்.  ஒவ்வொரு அணியும் மூன்று முதல் நான்கு முக்கியமான வீரர்களை மட்டும் தக்க வைத்துக் கொண்டு மற்ற வீரர்களை ஏலத்தில் விட வேண்டும்.  அந்த வகையில் அடுத்த மாதம் ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ளது.  இந்த வருடம் கூடுதலாக 2 புதிய அணிகள் ஐபிஎல்-ல் இணைந்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | விராட் கோலியின் டெஸ்ட் கேப்டன்சி சாதனைகள்!


மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியா, இஷன் கிஷன் போன்ற முக்கிய வீரர்களை ஏலத்தில் விட்டது.  2 புதிய அணிகளும் ஏலம் தொடங்குவதற்கு முன்பே தங்களுக்கு வேண்டிய வீரர்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.  அந்த வகையில் அகமதாபாத் அணி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, லெக் ஸ்பின்னர் ரசித்கான் மற்றும் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் ஆகியோரை தங்கள் அணியில் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 



குறிப்பாக ரஷித்கானை மற்ற அணிகள் ஏலத்தில் எடுப்பதற்கு முன்பு தங்களது அணியில் தக்க வைத்துக் கொண்டுள்ளது.  இஷன் கிஷன்-ஐ முதலில் தங்கள் அணியில் எடுக்கத் திட்டமிட்டிருந்த அகமதாபாத் பின்பு முடிவை மாற்றி சுமன் கில்லை அணியில் எடுத்துள்ளது.  இஷன் கிஷன்-ஐ ஏலத்தில் (IPL Auction)எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.  முக்கியமான இளம் வீரர் என்பதால் இசான் கிசனை எடுக்க மற்ற அணிகளும் போட்டி போடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 



அகமதாபாத் அணி ஆசிஸ் நெக்ரவை தலைமை பயிற்சியாளராக எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.  நெக்ரா 2017 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று ஆர்சிபி அணியில் துணை பயிற்சியாளராக இருந்து வருகிறார்.  ஜனவரி 22ஆம் தேதி வரை 2 புதிய அணிகளும் தங்களுக்கு வேண்டிய வீரர்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று பிசிசிஐ கூறியுள்ளது.


தக்கவைக்கப்பட்ட வீரர்களின் முழு பட்டியல்:


சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே): ரவீந்திர ஜடேஜா (16 கோடி), எம்எஸ் தோனி (12 கோடி), மொயீன் அலி (8 கோடி), ருதுராஜ் கெய்க்வாட் (6 கோடி)


கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்): ஆண்ட்ரே ரசல் (12 கோடி), வருண் சக்ரவர்த்தி (8 கோடி), வெங்கடேஷ் ஐயர் (8 கோடி), சுனில் நரைன் (6 கோடி)


சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH): கேன் வில்லியம்சன் (14 கோடி), அப்துல் சமத் (4 கோடி), உம்ரான் மாலிக் (4 கோடி)


மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ): ரோஹித் சர்மா (16 கோடி), ஜஸ்பிரித் பும்ரா (12 கோடி), சூர்யகுமார் யாதவ் (8 கோடி), கீரன் பொல்லார்ட் (6 கோடி)


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி): விராட் கோலி (15 கோடி), கிளென் மேக்ஸ்வெல் (11 கோடி), முகமது சிராஜ் (7 கோடி)


டெல்லி கேபிடல்ஸ் (டிசி): ரிஷப் பந்த் (16 கோடி), அக்சர் படேல் (9 கோடி, பர்ஸில் இருந்து 12 கோடி), பிருத்வி ஷா (7.5 கோடி, பர்ஸில் இருந்து 8 கோடி), அன்ரிச் நார்ட்ஜே (6.5 கோடி)


ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்): சஞ்சு சாம்சன் (14 கோடி), ஜோஸ் பட்லர் (10 கோடி), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (4 கோடி)


பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்): மயங்க் அகர்வால் (12 கோடி, பர்ஸில் இருந்து 14 கோடி), அர்ஷ்தீப் சிங் (4 கோடி)


ALSO READ | புதிய கேப்டனை தேர்ந்தெடுக்க போதுமான அவகாசம் உள்ளது - பிசிசிஐ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR