இந்தியா - வங்கதேசம் மோதல்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வங்கதேசத்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இந்திய அணி, அந்நாட்டு அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் இரு ஒருநாள் போட்டிகளிலும் தோல்வியை தழுவி, தொடரை இழந்த இந்திய அணி ஆறுதல் வெற்றி பெறும் முனைப்புடன் 3வது ஒருநாள் போட்டியில் களமிறங்கியது. கேப்டன் ரோகித் சர்மா காயத்தால் விலகிக் கொள்ள கே.எல்.ராகுல் தலைமையில் இந்திய அணி ஆடியது. ரோகித்துக்கு பதிலாக இஷான் கிஷன் அணியில் சேர்க்கப்பட்டார்.



மேலும் படிக்க | INDvsBAN: இந்திய அணியில் ஏற்பட்டிருக்கும் 3 அதிரடி மாற்றங்கள்!


இஷான் கிஷன் விளாசல்


டாஸ் வென்ற வங்கதேசம் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, இந்திய அணியில் தவான் மற்றும் இஷான் கிஷன் ஓப்பனிங் இறங்கினர். தவான் வந்த உடனே நடையைக் கட்ட மறுமுனையில் இருந்த இஷான் கிஷன், விராட் கோலியுடன் கூட்டணி அமைத்து வங்கதேசம் அணியின் பந்துவீச்சை நொறுக்கி எடுத்தார். 85 பந்துகளில் முதல் சதத்தை விளாசிய இஷான் கிஷன், அடுத்த சதத்தை வெறும் 41 பந்துகளில் அடித்து ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் 200 ரன்கள் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.



எலைட் லிஸ்டில் இடம்


131 பந்துகளை மட்டுமே எதிர் கொண்ட இஷான் கிஷன், 210 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் 24 பவுண்டரிகளும், 10 சிக்சர்களும் அடங்கும். அவரின் ரணகள ஆட்டம் முடிவுக்கு வந்தபிறகே வங்கதேச அணியின் நிம்மதி பெருமூச்சு விட்டனர். குறைந்த வயதில் இரட்டை சதம் அடித்த சர்வதேச கிரிக்கெட் வீரர் என்ற சாதனை மட்டுமல்லாமல் ஏற்கனவே ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த சச்சின், ரோகித் சர்மா மற்றும் வீரேந்திர சேவாக் ஆகியோருடன் எலைட் லிஸ்டிலும் இடம்பிடித்தார். வங்கதேசம் அணிக்கு எதிராக இந்திய வீரர் ஒருவர் அடித்த தனிநபர் அதிகபட்ச ஸ்கோரும் இஷான் கிஷன் வசமே வந்துள்ளது. 



 


மேலும் படிக்க | அடுத்த ஆண்டு இந்திய அணி விளையாடும் போட்டிகள்: முழு விவரம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ