இஷான் கிஷன் மருத்துவமனையில் அனுமதி..!
இலங்கை அணிக்கு எதிரான 2வது 20 ஓவர் போட்டியில் தலையில் காயமடைந்த இஷான் கிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
இந்தியா - இலங்கை அணிகளுக்கு எதிரான 2வது 20 ஓவர் போட்டி தர்மசாலாவில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றிபெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியுள்ளது. கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி வெற்றி பெறும் 4வது தொடராகும். இப்போட்டியின் 2வது இன்னிங்ஸில் இந்திய அணியின் பேட்டிங்கின்போது தொடக்க வீரராக களமிறங்கிய இஷான் கிஷனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. லஹிரு குமார் வீசிய பவுன்சரை அடிக்க முயற்சி செய்தபோது எதிர்பாரதவிதமாக பந்து இஷான் கிஷனின் ஹெல்மெட்டை பலமாக தாக்கியது.
மேலும் படிக்க | T20 WC: ’கலிவர்’ அவதாரம் எடுத்துள்ள மேக்ஸ்வெல்..!
அப்போது போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டாலும், பின்னர் இஷான் தொடர்ந்து விளையாடினார். 15 பந்துகளில் 16 ரன்கள் எடுத்த இஷான் கிஷன் போட்டி முடிந்தபிறகு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். காங்க்ராவில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையின் ஐசியுவில் இருக்கும் அவருக்கு ஸ்கேன் பரிசோதனை மேற்கொண்டதில் தலையில் காயம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சையில் இருக்க வேண்டியிருப்பதால், இன்று நடைபெறும் இலங்கை அணிக்கு எதிரான 3வது 20 ஓவர் போட்டியில் அவர் விளையாடாமாட்டார்.
அணியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள மயங்க் அகர்வால் அவருக்கு பதிலாக களமிறக்கப்பட உள்ளார். இதேபோல், இப்போட்டியில் காயமடைந்த தினேஷ் சண்டிமாலும் இஷான் கிஷன் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த தகவலை இமாச்சலா பிரிதேச கிரிக்கெட் கிளப் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | மேலும் படிக்க | IPL2022: சிஎஸ்கே-வில் இருந்து வெளியேறப்போகும் மற்றொரு வீரர்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR