சொதப்பிய ஜடேஜா.. மீண்டும் கேப்டன் ஆனார் தல தோனி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனி மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் 15வது சீசன் கடந்த மார்ச் 26-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா ஊரடங்கால் இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படாத நிலையில், இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
இந்த முறை புதிதாக இரண்டு அணிகள் இணைந்து மொத்தம் 10 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஐபிஎல் ஜாம்பவான்களான சிஎஸ்கே, மும்பை அணிகள் இந்த முறை தொடர் தோல்விகளில் சிக்கி புள்ளிப்பட்டியலில் கடைசி இடங்களில் இருக்கின்றன.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை அணிக்கு ஜடேஜா கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார். ஆனால் அணி எதிர்பார்த்த அளவு சோபிக்கவில்லை. இதற்கு காரணம் ஜடேஜாவின் அனுபவமின்மைதான் என பலர் கூறினர்.
அதுமட்டுமின்றி உலகின் தலைசிறந்த ஃபீல்டர்களில் ஒருவரான ஜடேஜாவுக்கு கேப்டன் பதவி சென்றதும் அவர் ஃபீல்டிங்கிலும் கோட்டை விடுகிறார் என்ற விமர்சனம் வைக்கப்பட்டது.
இதனால் கேப்டன் பதவியிலிருந்து ஜடேஜா விலக வேண்டுமென்றும் ரசிகர்களிடம் குரல் எழுந்தது. இதற்கிடையே அணிக்குள் உரசல் ஏற்பட்டதாகவும் ஜடேஜா கேப்டன் பதவியிலிருந்து விலகி தோனி மீண்டும் கேப்டனாக நியமிக்கப்படலாம் என ஜீ செய்திகள் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது.
மேலும் படிக்க | மீண்டும் கேப்டனாக களமிறங்கும் தோனி? சிஎஸ்கே அணிக்குள் வெடிக்கும் சர்ச்சை!
இந்நிலையில் சென்னை அணியின் கேப்டனாக தோனி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதனால் தோனி ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
மேலும் படிக்க | பந்துவீச்சில் சொதப்பிய ஆர்சிபி... தொடரும் குஜராத் டைட்டான்ஸ் அணியின் வெற்றி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR