பந்துவீச்சில் சொதப்பிய ஆர்சிபி... தொடரும் குஜராத் டைட்டான்ஸ் அணியின் வெற்றி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை குஜராத் டைட்டான்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

Written by - க. விக்ரம் | Last Updated : Apr 30, 2022, 07:28 PM IST
  • ஆர்சிபியை வீழ்த்தியது குஜராத் டைட்டான்ஸ்
  • 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி
  • அதிரடி காட்டிய மில்லர் - தெவாட்டியா
பந்துவீச்சில் சொதப்பிய ஆர்சிபி... தொடரும் குஜராத் டைட்டான்ஸ் அணியின் வெற்றி  title=

ஐபிஎல் 2022-ன் இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவும், குஜராத் டைட்டான்ஸும் மோதின. மும்பையில் பிற்பகல்  3.30 மணிக்கு போட்டி தொடங்கியது.

டாஸ் வென்ற ஆர்சிபி பேட்டிங் தேர்ந்தெடுத்தது. அதன்படி, டூ பிளசிஸும், விராட் கோலியும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். டூ பிளசிஸ் தொடக்கத்திலேயே பிரதீப் சாங்வான் ஓவரில் ரன்கள் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்.

இதனையடுத்து பட்டிதாருடன் கோலி கைகோர்த்தார். குஜராத்தின் பந்துவீச்சை பொறுமையாக இந்த ஜோடி எதிர்கொண்டது. ஜோசப் வீசிய ஐந்தாவது ஓவரில் விராட் கோலி இரண்டு பவுண்டரிகளும், பட்டிதார் ஒரு பவுண்டரியும் என மொத்தம் மூன்று பவுண்டரிகளை இந்த ஜோடி அடித்தது.

Kohli

விராட் கோலி தேவைப்பட்ட நேரத்தில் பவுண்டரிகளை விளாசினார். குறிப்பாக ஃபெர்குசன் வீசிய பத்தாவது ஒரு சிக்சர், இரண்டு பவுண்டரிகளை அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

கோலியை அடுத்து ஜோசப் ஓவரை எதிர்கொண்ட பட்டிதார் அந்த ஓவரி ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்து அசத்தினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கோலி 45 பந்துகளில் தனது அரை சதத்தை அடித்தார். 

கடந்த சில போட்டிகளாக தடுமாறிய கோலி இப்போட்டியில் 50 ரன்கள் அடித்ததால் அவரது ரசிகர்கள் மைதானத்தில் ஆராவாரம் செய்தனர். கோலியைத் தொடர்ந்து 29 பந்துகளில் பட்டிதாரும் தனது அரை சதத்தை அடித்தார். இது அவருக்கு முதலாவது அரைசதம் ஆகும்.

Patidhar

ஆனால் அரைசதம் அடித்த சில நிமிடங்களிலேயே 52 ரன்களில் பட்டிதார் விக்கெட்டை இழந்தார். இதனால் விராட் கோலி - பட்டிதார் பார்ட்னர்ஷிப் 99 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது. அடுத்ததாக அதிரடி வீரர் மேக்ஸ்வெல் களம் புகுந்தார். கோலியும், மேக்ஸ்வெல்லும் குஜராத் பந்துவீச்சை அக்ரெஸிவ் மோடிலே அணுகினர். ஆனால் 58 பந்துகளில் விராட் கோலி ஷமி ஓவரில் போல்டாகி வெளியேறினார். இதனால் அந்த அணி 123 ரன்களுக்கு மூன்றாவது விக்கெட்டை இழந்தது.

கோலியைத் தொடர்ந்து தினேஷ் கார்த்திக் களமிறங்கி மேக்ஸ்வெல்லுடன் ஜோடி சேர்ந்தார். ஆனால் மூன்று பந்துகளில் இரண்டு ரன்கள் எடுத்து நடையை கட்டினார். களத்தில் நிலைத்து நின்று ஆடிய மேக்ஸ்வெல்லும் 33 ரன்களில் ஆட்டமிழக்க பெங்களூரு 150 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் என்ற நிலையில் இருந்தது. கடைசி ஓவரில் லாம்ரர் சிக்ஸ் ஒன்றை அடிக்க அந்த அணி 170 ரன்களை குஜராத்துக்கு இலக்காக நிர்ணையித்தது.

IPL

இலக்கை துரத்துவதற்கு குஜராத் அணிக்கு சாஹாவும், சுப்மன் கில்லும் தொடக்கம் தந்தனர். பெங்களூருவின் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்டு இன்னிங்ஸை தொடங்கிய இந்த ஜோடி 7 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்களை குவித்தது.

இந்த ஜோடியை பிரித்தே ஆகவேண்டிய என்ற கட்டாயத்தில் பந்துவீச வந்த ஹசரங்கா சஹாவை 29 ரன்களில் வெளியேற்றினார். இதனால் குஜராத் அணி 51 ரன்களுக்கு தனது முதல் விக்கெட்டை இழந்தது.

அவருக்கு அடுத்து களமிறங்கிய சுதர்சன் சுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்தார். ஆனால் இவர்கள் பார்டனர்ஷிப் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே ஷாபாஸ் அகமது கில்லை 31 ரன்களுக்கு வெளியேற்றி குஜராத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

IPL

இதனால் அந்த அணி 68 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. 66 பந்துகளுக்கு 102 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலையில் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டிய களம் கண்டார். 

மேலும் படிக்க | தொடரும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வெற்றி... வீழ்ந்தது பஞ்சாப்

ஆனால் 4 பந்துகளை சந்தித்த அவர் ஷாபாஸ் பந்துவீச்சில் மூன்று ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பாண்டியா பெவிலியன் திரும்பிய சிறிது நேரத்திற்குள் சாய் சுதர்சனும் வெளியேற குஜராத் அணி 95 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அணியை வெற்றி பெற செய்ய வேண்டிய நிலைமையில் தெவாட்டியாவும், மில்லரும் இணைந்தனர். இந்த ஜோடி பெங்களூருவின் பந்துவீச்சை அதிரடியாக எதிர்கொண்டது. குறிப்பாக ஹேசில்வுட் வீசிய 18ஆவது ஓவரில் தெவாட்டியா ஒரு சிக்சரையும், பவுண்டரியையும், மில்லர் ஒரு பவுண்டரியையும் அடித்து பெங்களூரு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர். 

IPL

19ஆவது ஓவரை ஹர்ஷல் பட்டேல் ஓரளவு கட்டுக்கோப்பாக வீசிக்கொண்டிருந்த சமயத்தில் அந்த ஓவரின் கடைசி பந்தை தெவாட்டியா சிக்சருக்கு அனுப்பினார். இதனால் குஜராத் வெற்றி பெற கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவைப்பட்டது.

மேலும் படிக்க | ‘ஹிட்மேன்’ ரோகித் சர்மாவைப் பற்றித் தெரியாத சுவாரஸ்யத் தகவல்கள்! - HBD-Rohit-Sharma

கடைசி ஓவரை ஹேசில்வுட் வீசினார். ஓவரின் முதல் பந்திலேயே மில்லர் பவுண்டரி அடித்து வெற்றியை எளிதாக்கினார். 5 பந்துகளில் 2 ரன்கள் தேவை என்ற சூழலில் தெவாட்டிய பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடித்துவைத்தார். இதன் மூலம் குஜராத் டைட்டான்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News