IPL Auction 2023:ஹைதராபாத் கொட்டிக் கொடுத்து தட்டி தூக்கிய இளம் வீரர்! கோடிகளில் மிதக்கிறார்
ஐபிஎல் ஏலத்தில் இளம் வீரர் விவந்த் சர்மாவுக்கு அவரின் அடிப்படை விலையான 20 லட்சத்தில் இருந்து 13 மடங்கு கொட்டிக்கொடுத்து வாங்கியிருக்கிறது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
கொச்சியில் நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் பல வீரர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் அடித்தது. இதுவரை இல்லாத அளவுக்கு வீரர்கள் மீது பணமழை பொழிந்தது. அதில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த விவந்த் சர்மாவும் ஒருவர். லட்சத்தில் அடிப்படை விலை இருந்த நிலையில் கோடிகளை கொட்டி ஏலத்தில் எடுத்திருக்கிறது ஹைதராபாத் அணி.
விவந்த் சர்மாவுக்கு லாட்டரி
அதிரடியாக விளையாடக்கூடிய இளம் வீரரான விவந்த் சர்மா, லெக் ஸ்பின் பந்துவீச்சாளராகவும் இருக்கிறார். கடந்த ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நெட்ஸ் பந்துவீச்சாளராக இருந்தார். விவ்ராந்த் இதுவரை டீம் இந்தியாவுக்காக ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. இதனால், கேப் செய்யப்படாத வீரர்களில் சேர்க்கப்பட்டார். அவரை வாங்க ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. ஆனால் இறுதியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. அவரது அடிப்படை விலை ரூ.20 லட்சம். ஆனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அவரை ரூ.2 கோடியே 60 லட்சத்துக்கு வாங்கியது.
மேலும் படிக்க | IPL 2023 Auction:'கப்பு' எங்களுக்கு தான்.. ஏலத்தை நிறைவு செய்த குஜராத் டைட்டன்ஸ்!
சிறப்பான ஆட்டம்
விஜய் ஹசாரே டிராபியில் விவ்ராந்த் சர்மா சிறப்பாக செயல்பட்டார். ஜம்மு காஷ்மீர் அணிக்காக பல போட்டிகளில் தனித்துவமான பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளார். இது ராஜஸ்தான் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகளின் கவனத்தை ஈர்த்த நிலையில், இந்த ஐபிஎல் மினி ஏலத்தில் அவரை வாங்க போட்டி போட்டனர். இறுதியில் சன்ரைசர்ஸ் அணிக்கு சென்றுள்ளார்.
விவந்த் சர்மா பிறப்பு
விவ்ராந்த் 1999 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி பிறந்தார். இவரது மூத்த சகோதரரும் கிரிக்கெட் வீரர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இப்போது மூன்று ஜம்மு காஷ்மீர் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இவருக்கு முன், உம்ரான் மாலிக் மற்றும் அப்துல் சமத் ஆகியோர் ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | 17.50 கோடிகளை கொட்டி மும்பை இந்தியன்ஸ் தூக்கிய கேம்ரூன் கிரீன்! யார் இவர்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ