இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக அடியெடுத்து வைத்த முதல் போட்டியிலேயே பல சாதனைகளை முறியடித்து வருகிறார் ஜஸ்பிரித் பும்ரா. பிரிம்மிங்ஹாம் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஒரே ஓவரில் 35 ரன்கள் விளாசி சாதனை படைத்த அவர், இரண்டாவது இன்னிங்ஸில் ஒரே ஒரு விக்கெட் வீழ்த்தி 40 ஆண்டுகாலமாக இருந்த கபில்தேவின் சாதனையை முறியடித்துள்ளார்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கபில்தேவ் சாதனை முறியடிப்பு


எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்ஸ் விளையாடி வருகிறது. இதில் ஓலி போப் விக்கெட்டை வீழ்த்திய ஜஸ்பிரித் பும்ரா, இதுவரை இங்கிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை படைத்தார். இந்த தொடரில் மட்டும் 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.  இதற்கு முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் 1981-82-ல் சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்துக்காக 22 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அந்த சாதனையை சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு பும்ரா முறியடித்துள்ளார். 2014-ல் இங்கிலாந்தில் நடந்த தொடரில் 19 விக்கெட்டுகளை வீழ்த்திய புவனேஷ்வர் குமார் மூன்றாவது இடத்தில் உள்ளார்.


மேலும் படிக்க | காதல் முதல் கல்யாணம் வரை: இது தோனியின் காதல் கதை!


SENA நாடுகளில் அதிக விக்கெட்


இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் கிரிக்கெட்டில் SENA நாடுகள் என அழைக்கப்படுகிறது. இந்த அணிகளுக்கு எதிராக 100 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளார். பும்ரா இந்த அணிகளுக்கு எதிராக 101 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். அனில் கும்ப்ளே, இஷாந்த் ஷர்மா, ஜாகீர் கான், முகமது ஷமி மற்றும் கபில் தேவ் ஆகியோரைத் தவிர 100 விக்கெட்டுகளைக் கடந்த ஆறாவது இந்திய பந்துவீச்சாளர்  என்ற சிறப்பையும் பெற்றிருக்கிறார்.


வெற்றிபெறுமா இந்தியா?


எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நடைபெறும் கடைசி டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் 7 விக்கெட்டுகளை கைப்பற்றியாக வேண்டும். இங்கிலாந்து அணி 119 ரன்கள் எடுத்தால் இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரையும் சமன் செய்துவிடும். 14 ரன்களில் பேரிஸ்டோவ் கொடுத்த கேட்சை ஹனுமா விஹாரி கோட்டை விட்டதால் போட்டி ஆட்டம் தலைகீழாக மாறியுள்ளது. 


மேலும் படிக்க | விராட் கோலியுடன் வாக்குவாதம் ஏன்? பேரிஸ்டோவ் கொடுத்த விளக்கம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR