England's World Cup Squad: 2022ம் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து அணி அரையிறுதியில் இந்திய அணியையும், இறுதிப் போட்டியில் பாகிஸ்தானையும் தோற்கடித்து இரண்டாவது டி20 உலகக் கோப்பையை வென்றது. இந்நிலையில், ஜோஸ் பட்லரின் தலைமையில் 2024 டி20 உலக கோப்பைக்கான 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணியை அறிவித்துள்ளது.  வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ஆல்-ரவுண்டர் டாம் ஹார்ட்லி போன்ற வீரர்கள் 15 பேர் கொண்ட உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பெற்றுள்ளனர். மேலும், தற்போது ஐபிஎல் 2024ல் விளையாடி வரும் இங்கிலாந்து வீரர்களை நாட்டிற்கு திரும்பமாறு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வெற்றி! மும்பை பிளே ஆஃப் கனவு காலி - கேஎல் ராகுல் கோபம்!


 


வரும் மே 22 ஆம் தேதி ஹெடிங்லியில் பாகிஸ்தானுக்கு எதிரான இங்கிலாந்து அணி 4 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. "தற்போது இந்தியன் பிரீமியர் லீக்கில் விளையாடி வரும் டி20 உலக கோப்பை அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் 22 மே 2024 அன்று ஹெடிங்லியில் நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடருக்கான நாடு திரும்ப உள்ளனர்" ECB தெரிவித்துள்ளது. இதன் காரணமாக முக்கிய வீரர்கள் பிளேஆஃப்களில் விளையாட முடியாமல் போகும் வாய்ப்பு உருவாகி உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பில் சால்ட், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜோஸ் பட்லர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மொயீன் அலி, பஞ்சாப் கிங்ஸ் அணியின் சாம் குர்ரன் போன்ற வீரர்கள் ஐபிஎல்லை விட்டு பாதியில் விலகுகின்றனர்.


இந்த வீரர்கள் அவர்களது ஐபிஎல் அணிக்காக முக்கிய பங்கு வகித்துள்ளனர். பில் சால்ட் கொல்கத்தா அணிக்கு முக்கியமான ஓப்பனிங் வீரராக இருந்து வருகிறது. சமீபத்தில் பார்மிற்கு திரும்பிய ஜோஸ் பட்லர் ராஜஸ்தான் அணி முக்கிய சக்தியாக உள்ளார். மேலும் பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றால் இங்கிலாந்து வீரர்கள் இல்லாமல் சிரமப்பட உள்ளனர். ஆர்சிபி அணியில் உள்ள வில் ஜாக்ஸ் மற்றும் ரீஸ் டாப்லி, பிபிகேஎஸ் அணியில் உள்ள ஜானி பேர்ஸ்டோ, லியாம் லிவிங்ஸ்டோன் மற்றும் கேப்டன் சாம் குரான் ஆகியோர் நாடு திரும்ப உள்ளனர். மே மாதம் நடைபெற உள்ள பாகிஸ்தான் தொடரைத் தொடர்ந்து, ஜூன் 4 ஆம் தேதி ஸ்காட்லாந்துக்கு எதிராக முதல் டி20 போட்டியில் விளையாடுகிறது.


இங்கிலாந்து vs பாகிஸ்தான் டி20 அட்டவணை:


1வது டி20: இங்கிலாந்து v பாகிஸ்தான், மே 22, ஹெடிங்லி, லீட்ஸ்


2வது டி20: இங்கிலாந்து v பாகிஸ்தான், மே 25, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்காம்


3வது டி20: இங்கிலாந்து v பாகிஸ்தான், மே 28, சோபியா கார்டன்ஸ், கார்டிஃப்


4வது டி20: இங்கிலாந்து v பாகிஸ்தான், மே 30, கியா ஓவல், லண்டன்


டி20 உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணி:


ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயின் அலி, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜொனாதன் பேர்ஸ்டோ, ஹாரி புரூக், சாம் கர்ரன், பென் டக்கெட், டாம் ஹார்ட்லி, வில் ஜாக்ஸ், கிறிஸ் ஜோர்டான், லியாம் லிவிங்ஸ்டோன், அடில் ரஷித், பில் சால்ட், ரீஸ் டாப்லி, மார்க் வூட்


மேலும் படிக்க | கிரிக்கெட் இனி மெல்லச் சாகும்... ஐபிஎல் தொடரில் செய்ய வேண்டிய மாற்றங்கள் - என்னென்ன தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ