டெல்லி கேப்பிடல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைப்பெறும் IPL லீக் 13-வது போட்டியில் பஞ்சாப் அணி 166 ரன்கள் குவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

IPL 2019 தொடரின் 13-வது லீக் ஆட்டம் இன்று மொஹாலி பிந்திரா மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் தமிழக வீரர்  ரவிசந்திர அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் , ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன. 


இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்து விளையாடியது. 


இதனையடுத்து பஞ்சாப் தரப்பில் துவக்க வீரர்களாக களமிறங்கிய லோகேஷ் ராகுல் 15(11), சாம் கரன் 20(10) ரன்களில் அடுத்தடுத்து வெளியேற, இவர்களை தொடர்ந்து களமிறங்கிய வீர்களும் அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். பஞ்சாப் அணி தரப்பில் சர்ப்ரஸ் கான் 39(29), டேவிட் மில்லர் 43(30) ரன்கள் குவித்து அணிக்கு பலம் சேர்த்தனர். எனினும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணியால் 9 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது.


டெல்லி அணி தரப்பில் கிறிஸ் மோறிஸ் 3 விக்கெட், ரபாடா மற்றும் சந்தீப் லும்பிச்சன் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர்.


இதனையடுத்து 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்குகிறது.