KKR vs SRH: கிளாசெனின் மொத்த அதிரடியும் வீண்... பதைபதைக்க வைத்த கடைசி ஓவர்!
KKR vs SRH Highlights: ஐபிஎல் தொடரின் 3ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 4 ரன்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.
IPL 2024 KKR vs SRH Highlights : ஐபிஎல் தொடரின் மூன்றாவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கொல்கத்தா நகரின் ஈடன் கார்ட்ன் மைதானத்தில் மோதின. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்ததது.
கொல்கத்தா அணிக்கு சுனில் நரைன் - பில் சால்ட் ஓப்பனர்களாக களமிறங்கினர். முதல் ஓவரிலேயே சுனில் நரைன் 2 ரன்களில் ரன்அவுட்டாகி வெளியேற அடுத்து வெங்கடேஷ் ஐயர் களம்புகுந்தார். பில் சால்ட் யான்சன் வீசிய 2ஆவது ஓவரில் மூன்று சிக்ஸர்களை பறக்ககவிட்டார்.
பில் சால்ட் சிறந்த தொடக்கம்
பில் சால்ட் அதிரடியாக விளையாடினாலும் நட்ராஜனின் நான்காவது ஓவரில் வெங்கடேஷ் ஐயர் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் அவுட்டாகி வெளியேறினர். நிதிஷ் ராணா 9 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த ரமன் தீப் சிங், பில் சால்ட் உடன் சிறப்பான பங்களிப்பை அளித்தார். அவர் 17 பந்துகளை பிடித்து 4 சிக்ஸர்கள், 1 பவுண்டரி என 35 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். பில் சால்ட் அரைசதம் கடந்து 54(40) ரன்களில் ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடக்கம்.
மேலும் படிக்க | சுட்டிக்குழந்தை சாம் கரனின் வெறியாட்டம்... டெல்லியின் தோல்விக்கு என்ன காரணம்?
ரஸ்ஸல் வாணவேடிக்கை
கடைசி கட்ட ஓவர்களில் ரஸ்ஸல் ஈடன் கார்டன் பார்வையாளர்களுக்கு வாணவேடிக்கை காட்டினர். ரஸ்ஸல் - ரின்கு சிங் ஜோடி 32 பந்தில் 81 ரன்களை சேர்த்தது. ரின்கு சிங் 15 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 23 ரன்களை குவித்திருந்தார். கடைசி ஓவரில் நடராஜன் 8 ரன்களை மட்டும் கொடுக்க கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 208 ரன்களை குவித்தது. இதில் ரஸ்ஸல் 25 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் உடன் 64 ரன்களை எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். கடைசி ஓவரில் ஸ்டார்க் தன் பங்கிற்கு ஒரு சிக்ஸரையும் அடித்திருந்தார்.
ஹைதராபாத்துக்கு சிறப்பான பவர்பிளே
209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலயைில், சன்ரைசர்ஸ் பவர்பிளேவில் சிறப்பாக விளையாடியது. பவர்பிளேவின் கடைசி ஓவரில் மயாங்க் அகர்வால் 32(21) ரன்களில் ஹர்ஷித் ராணா பந்துவீச்சில் ஆட்டமிழ்ந்தார். சன்ரைசர்ஸ் பவர்பிளேவில் 65 ரன்களுக்கு 1 விக்கெட்டை மட்டுமே இழந்திருந்தது. களத்தில் வெறியுடன் அபிஷேக் சர்மா விளையாடிக் கொண்டிருந்தார். ஆனால் அவரும் 8ஆவது ஓவரில் ரஸ்ஸல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் 19 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் என 32 ரன்களை குவித்திருந்தார்.
மிடிலில் சொதப்பிய எஸ்ஆர்ஹெச்
ஆனால் மிடில் ஓவரில் கொல்கத்தா ரன்களை இறுக்கிப் பிடித்தது. குறிப்பாக சுனில் நரைன் 4 ஓவர்களை வீசி 19 ரன்களை மட்டும் கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார். இது கொல்கத்தாவுக்கு பெரிதாக உதவியது எனலாம். திரிபாதி, மார்க்ரம், அப்துல் சமத் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இருப்பினும், கடைசி கட்ட ஓவர்களில் கிளாசென் தனது அதிரடியை தொடங்கினார்.
கிலி கிளப்பிய கிளாசென்
ஹைதராபாத் வெற்றிக்கு 3 ஓவர்களில் 60 ரன்கள் தேவைப்பட்டது. கிளாசென் அதிரடியில் வருண் சக்ரவர்த்தி வீசிய 18ஆவது ஓவரில் 21 ரன்கள் குவிக்கப்பட்டது. தொடர்ந்து, 19ஆவது ஓவரை ரூ.24.75 கோடி கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்ட மிட்செல் ஸ்டார்க் வீசினார். அவரின் ஓவரையும் கிளாசென் விட்டுவைக்கவில்லை. கிளாசென் மூன்று சிக்ஸர்கள், ஷாபாஸ் அகமது ஒரு சிக்ஸர் என அந்த ஓவரில் மொத்தம் 26 ரன்கள் குவிக்கப்பட்டது.
கடைசி ஓவர் த்ரில்லர்
இதனால், கடைசி ஓவரில் 13 ரன்களே தேவைப்பட்டது. ஹர்ஷித் ராணா வீசிய முதல் பந்திலேயே மார்க்ரம் சிக்ஸர் அடிக்க 5 பந்துகளில் 7 ரன்கள் தேவைப்பட்டது, கிளாசன் அடுத்து சிங்கிள் அடிக்க, மூன்றாவது பந்தில் ஷாபாஸ் ஆட்டமிழந்தார். நான்காவது பந்தில் யான்சன் 1 ரன் எடுத்து, கிளாசெனுக்கு ஸ்ட்ரைக் கொடுத்தார். ஐந்தாவது பந்தை அவருக்கு தூக்கி அடிக்க முற்பட, எட்ஜ் பட்டு ஷார்ட் தெர்டு மேன் திசையில் இருந்த சுயாஷ் பிரபு தேசாய் பின்நோக்கி ஓடிசென்று அற்புதமாக கேட்ச் பிடித்து கிளாசெனை ஆட்டமிழக்கச் செய்தார்.
கிளாசென் 29 பந்துகளில் 63 ரன்கள். இதில் 8 சிக்ஸர்கள் அடக்கம். கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட கேப்டன் பாட் கம்மின்ஸ் அதில் ரன் ஏதும் அடிக்கவில்லை. இதனால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை ரஸ்ஸல் வென்றார்.
மேலும் படிக்க | அமைதியா வெளிய போடா... ரச்சின் அவுட் ஆனதும் விராட் கோலி செய்ய செயல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ