CSK Vs RCB Highlights: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2024 போட்டிகள் தற்போது துவங்கி உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த முதல் போட்டி கோலாகல துவக்க விழா உடன் துவங்கியது. இந்த ஆண்டு முதல் சென்னை அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கைகுவாட் பதவியேற்றுள்ளார். அவரது தலைமையில் சென்னை அணி தனது முதல் போட்டியில் விளையாடியது. டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் பாப் டு பிளசிஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார், காரணம் கடந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியை அதிக முறை வெற்றி பெற்று இருந்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரச்சின் ரவீந்தரா, டேரி மிட்சல், சமீர் ரிஸ்வி, முஸ்தபிசுர் ரஹ்மான் போன்றவருக்கு முதல் முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அதிரடியாக ஆட்டத்தை துவங்கியது. கேப்டன் பாப் டு பிளசிஸ் முதல் மூன்று ஓவரில் பவுண்டரி மற்றும் சிக்சர் மழைகளை பொழிந்தார். வெறும் நான்கு ஓவரில் ஆர்சிபி அணி 41 ரன்கள் எட்டியது. இந்நிலையில் தனது முதல் ஓவரை வீசிய முஸ்தபிசுர் ரஹ்மான் ஃபார் டூப்ளசிஸ் விக்கெட்டை வீழ்த்தினார். பின்பு அதே ஓவரில் ரஜித் பட்டிதாரை அவுட் செய்தார். அடுத்து வந்த மேக்ஸ்வெல்லும் முதல் பந்திலயே அவுட் ஆகி வெளியேறினார்.
இதனால் பவர் பிளே முடிவதற்குள் ஆர்சிபி அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்பு கடைசியில் ஜோடி சேர்ந்த அனுஜ் ராவத் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆர்சிபி அணியை சரிவிலிருந்து மீட்டனர். 20 ஓவர் முடிவில் ஆர்சிபி அணி ஆறு விக்கெடுகளை இழந்து 173 ரன்கள் குவித்தது. 100 ரன்களை தாண்டுமா என்று இருந்த நிலையில் இவ்வளவு பெரிய டார்கெட்டை செட் செய்ததால் ஆர்சிபி ரசிகர்கள் இந்த போட்டியில் வென்று விடலாம் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர். சென்னை அணியின் தரப்பில் முஸ்தபிசுர் ரஹ்மான் நான்கு ஓவரில் நான்கு விக்கெட்களை வீழ்த்தி அசத்தியிருந்தார்.
— Bangladesh vs Sri Lanka (@Hanji_CricDekho) March 22, 2024
பின்பு களமிறங்கிய சென்னை அணியில் ரச்சின் ரவீந்திரா நான்காப்புறமும் பவுண்டரி மற்றும் சிக்ஸர்களை விளாசி ஆர்சிபி அணியின் பவுலர்களை பயமுறுத்தினார். 15 பந்துகளில் மூன்று சிக்ஸர்கள் மற்றும் மூன்று பவுண்டரிகள் உட்பட 37 ரன்கள் அடித்து இருந்த ரவீந்திரா அவுட் ஆனார். இந்நிலையில் ரவீந்திரா அவுட் ஆன உடனேயே ஆக்ரோஷமாக இருந்த விராட் கோலி அவரை பார்த்து வெளியே செல்லுமாறு சைகை செய்தார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏனெனில் சிறப்பாக விளையாடி அவுட் ஆகி இருக்கும் ரச்சின் ரவீந்திரவை பார்த்து விராட் கோலி போன்ற சீனியர் பிளேயர் இப்படி செய்வது ரசிகர்களிடம் கேலி கிண்டலுக்கு ஆளாகியுள்ளது. அதே போட்டியில் விராட் கோலி 20 பந்துகளில் 21 ரன்கள் அடித்து அவுட் ஆகி இருந்தார்.
மேலும் படிக்க | MS Dhoni: தலைவன்னா இவர் தான்! பெட்டியை தூக்கிச் செல்லும் தல தோனியின் வீடியோ வைரல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ