கேஎல் ராகுலுக்கு திருமணம்! எப்போது தெரியுமா?
KL Rahul Wedding: கேஎல் ராகுல், தனது நீண்டநாள் தோழியான அதியா ஷெட்டியை திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அதன் தேதி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
KL Rahul Wedding Date: நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்த தொடர், ஜனவரி 18ஆம் தேதி ஹைதராபாத்தில் ஒருநாள் போட்டியுடன் தொடர் தொடங்குகிறது. இதற்கான அணிகளை பிசிசிஐ நேற்று அறிவித்தது.
அதில், கேஎல் ராகுல் இடம்பெறவில்லை. ராகுலின் நீண்ட நாள் காதலியான பாலிவுட் நடிகை அதியா ஷெட்டியை மகாராஷ்டிராவில் உள்ள கண்டாலாவில் வரும் ஜனவரி 23ஆம் தேதி திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ராகுலின் திருமணம் குறித்து குறிப்பிடவில்லை. குடும்ப பொறுப்புகள் காரணமாக கேஎல் ராகுல் & அக்சர் படேல் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இடம்பெறவில்லை என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்த திருமணம் பாலிவுட் மற்றும் கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விராட் கோலி அனுஷ்கா ஷர்மாவை மணந்த பிறகு, சமீப காலமாக ஒரு பாலிவுட் நடிகை, இந்திய கிரிக்கெட் வீரருடன் ஜோடி சேர்வது இது இரண்டாவது முறையாகும்.
அத்தியாவின் தந்தை சுனில் ஷெட்டி கடந்தாண்டு கூறுகையில்,"அவள் என் மகள், அவள் எப்போது வேண்டுமென்றாலும் திருமணம் செய்து கொள்வாள். என் மகனுக்கும் விரைவில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அது அவர்களின் விருப்பம். கே.எல். ராகுல் என் விருப்பத்திற்குரியவர். காலங்கள் மாறிவிட்டதால் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்களே தீர்மானிக்க வேண்டும்" என கூறியிருந்தார்.
கேஎல் ராகுலும், அதியா ஷெட்டியும் ஒரு பொதுவான நண்பர்கள் மூலம் ஒருவரையொருவர் சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை. கடந்த ஆண்டு அதியா ஷெட்டியின் பிறந்தநாளினபோது, கேல் ராகுல் இறுதியாக அவர்கள் இருவரின் காதலை அதிகாரப்பூர்வமாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்தனர்.
அன்றில் இருந்து ராகுலுடன் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார், அதியா. அவர் தனது காதலர் ராகுலுடன் சேர்ந்து சில பிராண்டுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். டெஸ்ட் தொடருக்காக ஆஸ்திரேலியா இந்தியா வரும்போது ராகுல் சர்வதேச கிரிக்கெட்டுக்கு மீண்டும் திரும்புவார்.
மேலும் படிக்க | Hockey World Cup: தாய் மண்ணில் வெற்றிக் கோப்பையை கைப்பற்றும் இந்திய ஆடவர் ஹாக்கி அணி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ