நாங்கள் ஃபார்முக்கு திரும்ப வேண்டும் - கே.எல். ராகுல் பேட்டி
நாங்கள் விரைவில் ஃபார்முக்கு திரும்ப வேண்டுமென லக்னோ அணி கேப்டன் கே.எல். ராகுல் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2022ல் நேற்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 178 ரன்களை குவித்தது.
179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி 8 விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்களில் 155 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ராஜஸ்தான் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
மேலும் படிக்க | வந்துவிட்டது பெண்களுக்கான ஐபிஎல் போட்டிகள்! அணி விவரம்!
லக்னோ அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான தீபக் ஹூடா, க்ருனால் பாண்டியா, ஸ்டாய்னிஸ் ஆகியோர் சிறப்பாக விளையாடினாலும் அந்த அணியின் முன்வரிசை வீரர்களும், பின்வரிசை வீரர்களும் சொதப்பினர். அதனால்தான் லக்னோ அணி தோல்வியடைந்ததாகவும் ரசிகர்கள் கூறுகின்றனர்.
தோல்விக்கு பிறகு பேசிய லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுல், “இது எட்டக்கூடிய இலக்குதான். புதிய பந்து பவுலர்களுக்கு உதவியாக இருந்தது. எங்களது பேட்டிங் ஒருசில ஆட்டங்களில் கூட்டாக செயல்படவில்லை. நாங்கள் ஃபார்முக்கு திரும்ப வேண்டும். புனே ஆடுகளம் கடினமாக இருந்தது.
மேலும் படிக்க | ராயுடுவின் ட்வீட்டுக்கு காரணம் என்ன?... ப்ளெமிங் விளக்கம்
ஆனால் இது ஒரு சிறந்த மைதானம். ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர். ஆரம்பத்திலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்தது மோசமான நிலைக்கு தள்ளியது. எனவே நல்ல தொடக்கத்தைப் பெறுவதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும். விரும்புவதைச் செயல்படுத்துவதே எங்களது குறிக்கோள்” என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR