விராட் கோலி டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகிய நிலையில் புதிய கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.  வரும் 4ம் தேதி தொடங்கவுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டனாக களம் இறங்குகிறார் ரோஹித்.  இந்த போட்டியில் விளையாடுவதன் மூலம் விராட் கோலி தனது 100வது ஆட்டத்தில் களம் இறங்க உள்ளார்.  இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்த இலங்கை அணி ஏற்கனவே டி20 தொடரை 0 - 3 என்ற நிலையில் இழந்துள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | கோலியால் ஓரங்கட்டப்பட்ட வீரர் - வாய்ப்பு கொடுக்கும் ரோகித் சர்மா..!


உலகத் டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை உயர்த்தியதில் கோலியின் பங்கு மிக பெரியது.   தற்போது இந்த இடத்தில் ரோஹித் பொறுப்பேற்றுள்ளார். மொஹாலியில் நடந்த போட்டிக்கு முன்னதாக ஷ்ரேயாஸ் ஐயர், "ரோஹித் மிகவும் ஆச்சரியமானவர், அவர் ஒரு வீரரின் பார்வையில் இருந்து சிந்திக்கிறார்.  ஒவ்வொரு வீரருடனும் பேசி அவர்கள் மனதை புரிந்து கொள்கிறார்" என்று பாராட்டி இருந்தார்.  ஜனவரி மாதம் தென்னாப்பிரிக்காவில் இந்தியா 2-1 என்ற நிலையில் தோல்வி அடைந்தது. இதற்கு பிறகு கோலி டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இந்த முடிவு அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.  மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இந்தியாவை கொண்டு சென்றார்.  ஆனாலும் கோலியால் உலக கோப்பையை வெல்ல முடியவில்லை.   



இலங்கை அணிக்கு எதிராக 3 டி20 போட்டிகளிலும் சிறப்பாக ஆடிய ஷ்ரேயாஸ் ஐயர் டெஸ்ட் போட்டியிலும் தனது ஆதிக்கத்தை தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இலங்கை முதலிடத்தில் உள்ளது. இந்தியா அணியும் பலம் வாய்ந்ததாக உள்ளது, ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இலங்கையின் கேப்டன் திமுத் கருணாரத்னே மற்றும் தனஞ்சய டி சில்வா போன்ற பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க | BCCI on 100th Test of Virat: 50 சதவிகித பார்வையாளர்களுடன் விராட் கோலியின் 100வது டெஸ்ட் போட்டி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR