தோனியின் ஓய்வுக்குப்பிறகு இந்த வீரருக்கு இந்திய அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. பெரும்பாலான போட்டிகளில் இந்திய அணியில் இடம் கிடைத்தாலும் பெஞ்சிலேயே உட்கார வைக்கப்பட்டார். ஆனால், ரோகித் சர்மா மீண்டும் கேப்டனான பிறகு, இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு அந்த வீரருக்கு கிடைத்துள்ளது. அவர் தான் குல்தீப் யாதவ்.
மேலும் படிக்க | ஐபிஎல் 2022-ல் விளையாடுகிறாரா சுரேஷ் ரெய்னா? எந்த அணிக்கு தெரியுமா?
கோலி - கும்பிளே பிரச்சனை
இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த கும்பிளேவுக்கும், கோலிக்கும் இடையே 2017 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் இந்திய சுற்றுப் பயணத்தின்போது தொடங்கியது. அந்த தொடரின் 3வது டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவை அணியில் சேர்க்க வேண்டும் என கும்பிளே விரும்பினார். ஆனால், கோலி அதனை திட்டவட்டமாக மறுத்துவிட்டார். அதேநேரத்தில் அந்தப் போட்டியில் காயம் காரணமாக கோலி விளையாடவில்லை. அவருக்கு பதிலாக ரஹானே கேப்டனாக செயல்பட்டார்.
குல்தீப் யாதவ்
குல்தீப் யாதவைப் பொறுத்தவரை இடது கை மணிக்கட்டில் பந்துவீசும் தனித்துவமான பந்து வீச்சாளர். ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடியுள்ள அவர், தோனி இந்திய அணியின் கேப்டனாக இருந்தபோது இந்திய அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பும் குல்தீப்புக்கு அதிகம் கிடைத்தது. ஆனால், கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகியவுடன், குல்தீப்பின் வாய்ப்புகள் தலைகீழாக மாறியது.
மேலும் படிக்க | கேப்டனை அறிவிப்பதில் RCB-க்கு இவ்வளவு தாமதம் ஏன்?
ரோகித் சர்மா கொடுக்கும் வாய்ப்பு
ஆனால், கேப்டன் பொறுப்பை ரோகித் சர்மா ஏற்றவுடன் குல்தீப் யாதவுக்கான வாய்ப்பு மீண்டும் கிடைக்கத் தொடங்கியுள்ளது. இந்திய அணிக்கு விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ள குல்தீப், இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் களம் காண இருக்கிறார். ரோகித் சர்மாவைப் பொறுத்தவரை குல்தீப் யாதவ்வின் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்.
குல்தீப் கேரியர்
இந்திய அணிக்காக 24 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கும் குல்தீப் யாதவ், 41 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 45 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 40 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், இந்திய அணிக்காக 66 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கும் குல்தீப் யாதவ் 109 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 26 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். ஆஸ்திரேலியாவின் சிட்னியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையையும் குல்தீப் படைத்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR