கோலியின் வித்தியாசமான ஆசிரியர்தின வாழ்த்து!
இந்திய கிரிகெட் அணியின் கேப்டன் விராட் கோலி தற்போதைய தலைமுறையின் மிக வெற்றிகரமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக உள்ளார். இவரது வெற்றி நீண்ட தூரத்திலிருந்தும், நிறைய தடை கற்களையும் தாண்டி வந்துள்ளது.
இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும், தனது ஆசானை கோலி பாவிக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், ஆசிரியர்கள் தினமான இன்று உலகின் அனைத்து ஆசிரியர்களுக்கும் மரியாதை செலுத்தியுள்ளார்.
இந்த கிரிக்கெட் வீரர்களுக்கு தனது நன்றியை தெரிவிக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார். படத்தில், விராட் பல வெற்றிகரமான கிரிக்கெட் வீரர்களின் பெயர்களைக் கொண்ட சுவர் முன் உட்கார்ந்துள்ளார்,
மேலும் அவர் குறிபிட்டுள்ளதவது, "உலகெங்கிலும் உள்ள எல்லா ஆசிரியர்களுக்கும், குறிப்பாக கிரிக்கெட் உலகில் உள்ளவர்களுக்கும். #HappyTeachersDay" என பதிவிட்டுள்ளார்.